Breaking News

தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடவிருப்பமனு விநியோகம் தொடங்கிய 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடவிருப்பமனு  விநியோகம் தொடங்கிய 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன   

தவெக விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கிய 2 மணி நேரத்தில் மனுக்கள் விற்றுத் தீர்ந்தன . தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தல்.



சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், பகல் 12 மணிக்கு தொடங்கப்பட்ட விருப்ப மனு விநியோகம், இரண்டரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன; 50,000+ மனுக்கள் விற்றுள்ளதாக தவெக தரப்பில் தகவல்! 

தவெகவில் ஒரே நாளில் ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், “தவெகவில் ஒரே நாளில் ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பெயரில் எவ்வளவு மனு வாங்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டுவருகிறது. 



மனுக்களை திரும்ப வழங்கும்நாள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். நாளை முதல் 14ம் தேதி வரை காலை 10 மணி முதல் வழங்கப்படும். உங்கள் வசதிக்கு ஏற்ப வந்து விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

எங்கள் தலைவர் மீது எந்த விமர்சனமும் இல்லாததால் வரி பாக்கி விஷயத்தை பேசுகிறார்கள். திமுகவிற்கு உதவி செய்வதற்காகவே அதிமுகவினர் தவெகவை பற்றி பேசுகின்றனர். மக்கள் புறக்கணித்த அதிமுகவை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback