Breaking News

2ம் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!

அட்மின் மீடியா
0

2வது கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!


சென்னையில் இன்று அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஏற்கனவே 5 வாக்குறுதிகளை அதிமுக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:-

சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் 

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் காக்கும் வகையில் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2,00,000 வழங்கப்படும்.அரசு அங்கீகரிக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.ஏற்கனவே வெளியிட்ட 5 வாக்குறுதிகள் :

1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

.3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

.5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 – மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback