Breaking News

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் - உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி வென்ற 19 வயது மாணவன் நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் - உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி வென்ற 19 வயது மாணவன் நடந்தது என்ன 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19), பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பினார். இதற்காக கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான முறையான கொள்கையை மாநில அரசு அமல்படுத்தாத காரணத்தால் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது

ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக ஏற்கனவே ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் அவரே நேரில் ஆஜராகி வாதாடிய போது, ‘நீ ஒரு சிறந்த வக்கீலாக வருவாய்’ என்று நீதிபதி பாராட்டியும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. 

தனது மருத்துவக் கனவை கைவிடாத அதர்வா சதுர்வேதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்  இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. முன்னிலையில் தானே வாதாடினார். 10 நிமிடங்கள் அவர் முன்வைத்த தெளிவான வாதங்களை கேட்ட நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி அவருக்கு ஆதரவாக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்

தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற காரணத்தை கூறி தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தனர். 

ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback