மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த
திமுகவின் திருச்சி சிவா,
என்.ஆர். இளங்கோ,
அந்தியூர் செல்வராஜ்,
கனிமொழி
என்விஎன் சோமு,
அதிமுக தம்பிதுரை,
தமாகா ஜிகே வாசன்
ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.
இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அட்டவணை:-
பிப்ரவரி 26-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும்
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9
போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16
வாக்குப் பதிவு நடைபெற்றால் மார்ச் 16- ந் தேதி
மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
