Breaking News

மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது - இனி எல்லாமே ரயில் ஒன் ஆப் மட்டும் தான் முழு விவரம் rail one app details

அட்மின் மீடியா
0

மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது - இனி எல்லாமே ரயில் ஒன் ஆப் மட்டும் தான் முழு விவரம் rail one app details

இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் யுடிஎஸ் டிக்கெட் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து யுடிஎஸ் செயலி செயல்படாது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது

அதாவது யுடிஎஸ் செயலியில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களுமே தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் ஒன் (RailOne) செயலியில் இருக்கிறது என்பதால், எதற்கு ஒரே சேவைக்கு பல்வேறு செயலிகள் என்ற அடிப்படையில் யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை நிறுத்தப்படுகின்றது

இனி பயணிகள் ரயில் ஒன் செயலி வாயிலாகவே அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை வாங்கி கொள்ள முடியும் என தெரிவித்திருக்கிறார். 

யுடிஎஸ் செயலியில் இருக்கக்கூடிய தங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்ட்டை கொண்டே பயணிகள் ரயில் ஒன் செயலியில் லாகின் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் 

குறிப்பாக ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த சலுகை வரும் ஜூலை 14ஆம் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயணிகள் ஆர் வாலெட் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்யும்போது கூடுதலாக மூன்று சதவீத தள்ளுபடி என மொத்தமாக ஆறு சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

ரயில் டிக்கெட் மற்றும் அனைத்து சேவைகளுக்கு ரயில் ஒன் செயலி ரயில்வே அமைச்சர் அறிமுகம் rail one app



அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், ரயில் ஒன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

ஏற்கனவே முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது.

அதேபோல் புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ செயலி உள்ளது. 

இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ரெயில்வே அமைச்சகம் உருவாக்கிய ‘ரெயில்ஒன்’ என்ற செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்துள்ளார்.

RailOne என்ற புதிய செயலியை இன்று அறிமுகப்படுத்தினார். பயன்படுத்துவதற்கு எளிதான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு செயலி இது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் ரயில் கனெக்ட் மற்றும் யுடிஎஸ் செயலிகளின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உள்நுழையும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.

ஆப் சிறப்புகள்;-

முன்பதிவு டிக்கெட் பதிவு செய்ய

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுக்க

பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்க

பி.என்.ஆர். சேவை 

ரயில் எந்த இடத்தில் உள்ளது என பார்க்க

ரெயிலில் உணவு முன்பதிவு

ரயில் குறை தீர்க்கும் சேவை, 

மின் கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு

டாக்ஸி சேவை

R-Wallet (ரயில்வே மின்-வாலட்) வசதி

IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ள பல வணிக பயன்பாடுகளைப் போலவே RailOne செயலியும் IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://play.google.com/store/apps/details?id=org.cris.aikyam&hl=en_IN

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback