இன்றைய 08.02.2026 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today
இன்று 08.02.2026 ஞாயிற்றுகிழமை இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today
📢 தமிழக செய்திகள்:-
திமுகவின் 200 தொகுதி இலக்கு: 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களிடையே உரையாற்றியுள்ளார். வரவிருக்கும் தேர்தல் 'தமிழ்நாடு vs என்டிஏ (NDA)' என்ற போராக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகச் சாடினார். அதிமுகவை "பாஜகவின் இலை" என்று விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ். பாபு தவெக-வில் இணைந்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக தனக்கு சீட் வழங்கப்படாது என்ற தகவலை மறுத்துள்ள அமைச்சர் துரைமுருகன், மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
இன்று முதல் பிப்ரவரி 12 வரை தமிழகத்தில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மதிய நேரங்களில் வெப்பம் 1-2°C வரை உயரக்கூடும்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடப்பட்ட தந்தங்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவின்படி, சுமார் 233 யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் எரித்து அழித்தனர்.
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்தார். அமெரிக்க அணியின் பந்துவீச்சு இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விசிக - திமுக கூட்டணி: திமுக கூட்டணியில் விரிசல் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "விசிக திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது" என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ₹25,000 வரை உடனடி இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓடிபி (OTP) கொடுத்து பணத்தை இழந்திருந்தாலும் இந்த இழப்பீடு பொருந்தும்.
பட்டா வழங்க சிறப்பு அறிவிப்பு: ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் நீண்டகாலமாக வசிப்பவர்கள், தங்கள் நிலத்தை முறைப்படுத்தி பட்டா பெற வரும் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு காலக்கெடு விதித்துள்ளது.
சபரிமலை தங்கம் மோசடி: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக சென்னையில் இடி (ED) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலவில் இறங்கி மண், பாறை மாதிரிகளை எடுத்து திரும்பும் சந்திரயான் 4 திட்டப்பணிகளில் தீவிரம் காட்டுகிறது இஸ்ரோ - நிலாவின் மோன்ஸ் மலைக்கு அருகில் செயற்கைகோளை தரை இறக்க 3D படத்தை உருவாக்கி ஆய்வு.
பிரான்சில் இருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பாதுகாப்புத்துறை நடவடிக்கை எனத் தகவல் - அடுத்த வாரம் கூடும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுமென எதிர்பார்ப்பு.
வருமான வரிக்கான புதிய விதிமுறைகளின் வரைவு திட்டத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் - பதக்கப்பட்டியலில் 41 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்.
இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒன்பது ஆட்டங்களில் வெற்றி சாதனையை படைத்தது இந்திய அணி - அமெரிக்க அணி உடனான போட்டியில் பெற்ற வெற்றியால், தென்னாப்பிரிக்க அணியின் சாதனையை தகர்த்தது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கிய பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விவசாயிகள் பேரணி: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் இன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். மார்ச் 19-ல் டெல்லியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மக்காச்சோளம் மீதான வரியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் (Suspension) உள்ள காவலர்களை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் பணியில் சேர்க்கலாம் என உயர் நீதிமன்றம் மற்றும் டிஜிபி தரப்பிலிருந்து அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.
'Home Again' என்ற மனநலம் பாதித்தோருக்கான மறுவாழ்வுத் திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்ய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பாகலூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் மலர்கள் அனுப்பப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் 23 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பெயரில் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி., பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்கும் கூட்டத்தை நடத்தினார். "திமுக சொல்வதைச் செய்யும்" என அவர் அங்கு உரையாற்றினார்.
வரும் பிப்ரவரி 12 முதல் 14-ம் தேதிக்குள் தனது கட்சியின் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹700 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
கோவை - சென்னை விரைவு ரயில்: கோவை - சென்னை இடையே புதிய 'அதிவேக வந்தே பாரத்' ரயில் சேவையை நீட்டிக்க பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களின் அதீத பயன்பாட்டினால் '90s கிட்ஸ்களை விட 'ஜென்-சி' (Gen-Z) தலைமுறையினரின் ஆழமாகச் சிந்திக்கும் திறன் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் யூஃபா (Ufa) நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்து இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது.📅
தனித்தமிழறிஞர் பாவாணர்: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நினைவைப் போற்றும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் புதிதாக மேலும் ஒரு தூதரகத்தை இந்தியா திறக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு மலேசியா வாழ் இந்தியர் நலனை பேண தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி...
கொடுங்க, கொடுங்க என தொடர்ந்து கேட்டாலும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுப்பதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் - தேர்தலுக்காக கூட பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பேச்சு.
ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை பணியாளர்கள் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுவதாக இ.பி.எஸ். குற்றச்சாட்டு - கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிவோரை தி.மு.க. அரசு சுயலாபத்துக்காக பயன்படுத்துவதாகவும் விமர்சனம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுக எதிர்த்துப் போட்டியிடும் எனத் தகவல் - கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் விஜய் போட்டியிட்டால், அக்கட்சிக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தகவல்.
அதிமுக கூட்டணி என்பது மக்கள் நலனுக்கானதல்ல என திமுக இளைஞரணி தென்மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு; அதிமுகவில் மியூசிக்கல் சேர் விளையாட்டு நடப்பதாகவும் விமர்சனம்
டெல்லியில் வரும் 10ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை; தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கியத்துவம் பெறும் கலந்துரையாடல்
பிரதமர் மோடியின் காலைப் பார்த்து பழனிசாமி நடப்பதாக உதயநிதி கடும் தாக்கு; பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி என்றும் விமர்சனம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி; பங்கு கொடுக்கும் மனது, முதல்வருக்கு இருக்கிறது என்றும் கருத்து
பாஜகவுடன் அதிமுக துரோகக் கூட்டணி வைத்துள்ளதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்; தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு
பாஜக மதத்தை வைத்தும், பாமக சாதியை வைத்தும் வெறுப்பரசியலில் ஈடுபடுவதாக திருமாவளவன் விமர்சனம்; விசிகவின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் முதல்வர் முடிவெடுக்க மாட்டார் என்றும் நம்பிக்கை
அதிமுகவுக்கு பாதகம் வராதபடி பன்னீர்செல்வம், சசிகலா நடந்துகொள்வார்கள்; இருவரும் தனிப் பாதையில் செல்ல மாட்டார்கள் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் சூசகம்
மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடுக்கம்; முதல்வர் பதவிக்கு ஏற்றவாறு பேசவில்லை என்றும் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
இந்திய - மலேசிய உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்; மலேசியாவைப் போலவே தமது அரசிலும் அதிக தமிழர்கள் இருப்பதாக மகிழ்ச்சி
Tags: தமிழக செய்திகள்
