Breaking News

வெனிசுலா நாடு மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு போர் பதற்றம் venezuela attack

அட்மின் மீடியா
0

 வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.



அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்தது.7 இடங்களில்...!இந்த சூழலில் இன்று திடீரென 

வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

வெனிசுலா மீதான தாக்குதலை, அமெரிக்க ராணுவம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் டிரம்ப், கிறிஸ்துமஸ் தினத்தன்றே தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல், ஐநா விதிமுறைகளுக்கு எதிரானது. சர்வதேச அமைதியை குலைக்கும் செயல் என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது. மேலும் வெனிசுலா என்பது அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடு. இந்த நாட்டில் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கிறது.

Give Us Your Feedback