Today Headlines
Today Headlines
சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை! மூச்சுவிடுவதில் பிரச்னை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா உள்ளிட்ட நாடுகளுடன், ஐ.நா சபை, நியூயார்க் மேயர் மம்தானியும் கடும் கண்டனம்.
கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 60% வழங்கப்படும் -முதலமைச்சர்
திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான எல்.கணேசன்(92) உடல்நலக் குறைவால் காலமானார்- தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், -மொழிப் போர் தளபதி என அழைக்கப்படுபவர்; 3 முறை எம்எல்ஏவாக இருந்த எல்.கணேசன் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்திருக்கிறார்
சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோவின் கண்களை கட்டி, கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற அமெரிக்க படையினர். போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்றுத் தருவோம் -டிரம்ப்
புது டெல்லி: டியூஷன் முடித்து வீடு திரும்பிய போது தனது தாயின் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய திருடனை துரத்திச் சென்று பிடித்த 14 வயது சிறுமி திவ்யா!
பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக, பிராட்வேவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ஜன.7ம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என MTC அறிவிப்பு.
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; போர்க் கப்பலில் மதுரோவை கண்ணைக் கட்டி அழைத்துவரும் புகைப்படத்தையும் வெளியிட்டார்
ஜனவரி 6ஆம் தேதி முதல் நடைபெற இருந்த வேலைநிறுத்தம் ரத்து; முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் அறிவிப்பு
புதிய ஆட்சி உருவாகும் வரை வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும்; வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்பை மறுசீரமைக்கவுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு செயலியை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க அழைப்பு
அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு; அரசு அலுவலர்கள்,ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டம் அறிவிப்பு
10 ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியம் வழங்கப்படும்; கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும் என்றும் முதல்வர் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை என்பது வதந்தி; திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம்
வெனிசுலா மீதான நடவடிக்கைகளுக்கு பிரேசில் அதிபர் கண்டனம் - ஒரு நாட்டின் அதிபரை கைது செய்துள்ளதன் மூலம் ஏற்க முடியாத எல்லையை அமெரிக்க மீறி உள்ளதாக அறிவிப்பு
நாளை அவசரமாக கூடுகிறது ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் - வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டது குறித்து விவாதிக்க நடவடிக்கை
பதற்றம் நிலவுவதால் வெனிசுலாவிற்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வெனிசுலாவில் உள்ள இந்தியர்களுக்கான தொடர்பு எண்கள் மற்றும் இ-மெயில் முகவரியும் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாட வங்கதேச அணி மறுப்பு முஸ்தாபிஜூர் ரகுமான் நீக்கத்தையடுத்து போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ICC-யை வலியுறுத்த நடவடிக்கை
Tags: தமிழக செய்திகள்
