Breaking News

News Today Headlines இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

News Today Headlines இன்றைய முக்கிய செய்திகள்




தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்து விடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் . இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். இறுதி மூச்சு உள்ளவரை திமுகவை எதிர்ப்பது - வி.கே. சசிகலா அறிக்கை

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த 49வது புத்தகக் காட்சி நிறைவு. 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகக்காட்சியை பார்வையிட்டதாக தகவல்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 வாரங்களில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு125 ஏக்கர் நிலத்தில் 233 பேர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என அறநிலையத்துறை சார்பில் பதில்

10,001mAh மெகா பேட்டரி திறன்கொண்ட 'Realme P4 Power' ஸ்மார்ட்போனை ஜன.29ல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது Realme!ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் பேட்டரி நீடிக்கும், 32 மணிநேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்று Realme கூறுகிறது. இதன் விலை ரூ.25,000 - ரூ.30,000க்குள் இருக்கும் என எதிர்பார்ப்பு.

கேரளா பேருந்து பயணத்தில் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கைது!தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்தவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்க (23.01.2026) សំ 2-15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார் பிரதமர் மோடி. தனி விமானம் மூலம் வந்தடைந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்ல ஏற்பாடு.

கொடைக்கானலில் வனப்பகுதிக்குள் கொட்டப்படும் குப்பைகளை 3 நாட்களுக்குள் அகற்றவில்லை எனில் ரிமாண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

சபரிமலை தங்கம் முறைகேடு வழக்கில் விசாரணை தீவிரம். சென்னையில் 100 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படாது -சென்னை மாநகர போக்குவரத்து கழகம்.ராயபுரம், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிப்பு

ரஷ்யாவில் அதிகளவில் பனிக்கட்டிகள் இருந்ததால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. 2 பெண்கள் காயங்களுடன் மீட்ப

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை.

விசிக தலைவர் திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்.வன்னியர்களையும், தலித் மக்களையும் இரண்டு தண்டவாளங்களாகப் பார்ப்பவர்தான் ராமதாஸ். அப்படி இருக்க எங்களுக்கு யாருமே எதிரி அல்ல.

சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணியை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

சென்னை தாம்பரம் பாரத் நகரில் தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்த மாணவி டெங்குவால் உயிரிழப்பு; மேலும் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதால் விடுதிக்கு விடுமுறை விடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று விவாதம். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கவும் ஆணை

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம், சென்னை பனையூரில் விஜய் தலைமையில் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்திற்கு மேலும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் அறிவிப்பு. தாம்பரம், நாகர்கோவில் நகரங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.

தினகரனை தொடர்ந்து அன்புமணி, பாரிவேந்தர் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த பியூஷ் கோயல். எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் ஆதரவாளர்கள். வரும் 26-ம் தேதிமுன்னாள் எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரன்  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் உரையை படிக்க ஆளுநர் தவார்சந்த் கெலாட் மறுப்பு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் ஆளுநரின் செயலால் பரபரப்பு.

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம். வரும் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து.

உதகை அருகே தோடர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோயில் சீரமைப்பு பணி. 2 மாதம் விரதமிருந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட பழங்குடியினர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு. பினராயி விஜயன் கூட்டணியில் இணைந்தால் கேரளாவுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் கருத்து.

தெலுங்கானாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன். வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தலைமறைவான நபரை தேடும் போலீசார்.

அரியானாவில் புகழ்பெற்ற ஜிண்டல் கோபுரத்தின் மீது அந்தரத்தில் தொங்கிய இளைஞர். ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் அதிரடியாக கைது

கிரீன்லாந்தைக் கைப்பற்ற ராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டம். கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்காவை நேட்டோ அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback