Breaking News

News Headlines Today இன்றைய தலைப்பு செய்திகள்

அட்மின் மீடியா
0

News Headlines Today இன்றைய தலைப்பு செய்திகள்



பொங்கல் பரிசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உடன் ரூ.3000 ரொக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.மேலும் பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முதலமைச்சர் உத்தரவு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு! 12 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை.

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் அரசு ஊழியர்கள்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு. வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பியவர்களால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.

பத்திரப்பதிவுத் துறை தகவல்களை சேமிக்கும் Hardware-ல் சனிக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இரு நாட்களாக அனைத்து முயற்சிகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.எனவே இதை கருத்தில் கொண்டு பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்” -பதிவுத்துறை தலைவர் வேண்டுகோள்

உலகிலேயே முதல்முறையாக,155 மி.மீ. பீரங்கி குண்டுகளில் அதிநவீன 'Ramjet' தொழில்நுட்பத்தைப் புகுத்தி இந்திய ராணுவம் தனது தாக்குதல் தூரத்தை 80 கி.மீ வரை அதிகரித்து புதிய சாதனை!சென்னை ஐஐடி உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மூலம், ஒலியை விட இருமடங்கு வேகத்தில் குண்டுகளை ஏவி எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்க முடியும். விரைவில் இது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்.

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பு விஜயின் பெருந்தன்மையை காட்டுவதாக சீமான் கருத்து; விஜய் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் திடீர் மாற்றம்

பெரியாரை வீழ்த்த நினைப்பவர்களுக்கு சீமானின் அரசியல் ஏதுவாக அமைய கூடாது என திருமாவளவன் வலியுறுத்தல்; தன்னை இளம் தலைமுறைக்கு ஒரு பெரியார் என்று கூறியதற்காக நன்றி தெரிவித்த திருமாவளவன்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணிப்பு: வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்

அமெரிக்கா, வெனிசுலா மோதல் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்; வெனிசுலாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சகம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback