News Head Lines Today இன்றைய முக்கிய செய்திகள்
News Head Lines Today இன்றைய முக்கிய செய்திகள்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நேற்று இரவு சந்தித்து பேசினார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவிப்பு.டெல்லி, சென்னை, அகர்தலா உட்பட அனைத்து தூதரகங்களிலும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களைத் தவிர, சுற்றுலா உள்ளிட்ட இதர அனைத்து வகை விசா சேவைகளும் ரத்து.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக.அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்ததாக அன்புமணி அறிவிப்பு; தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்காத நிலையில், ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிப்பு. தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை (ஜன.09) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பதை முடிவு செய்வதே வரும் தேர்தல். அதிமுக வென்றால் பாஜகதான் ஆட்சி செய்யும் எனவும் பேச்சு.
சென்னை ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை இடையே பீக் ஹவர்சில் இனி 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்...பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு. திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்!
தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.தேதி வாரியாக பணிக்கு வராதவர்கள் பட்டியலை தயாரித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு அனுப்ப ஆணை. No work-No pay அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில், அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவ்வழியே சென்ற 2 பைக்-கள், 1 கார் சேதம். விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்.விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மெரினா கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். சாலையில் தலை குப்புற கவிழ்ந்துகிடக்கும் காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
அன்புமணியுடன் கூட்டணி பேச்சு நடத்துவது சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடல்; கட்சி விதிப்படி தன்னுடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடத்த வேண்டும் என அறிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்; பிரதமர் மோடியும், ராகுலும் ஒரே நேரத்தில் வரவுள்ளதால் சூடுபிடிக்கும் அரசியல் களம்
Tags: தமிழக செய்திகள்
