Breaking News

Chennai Ula சென்னையில் முக்கிய 16 சுற்றுலாதளங்களை சுற்றிப்பார்க்க ரூ.50 மட்டுமே முழு விவரம்

அட்மின் மீடியா
0

Chennai Ula  சென்னையில் முக்கிய 16 சுற்றுலாதளங்களை சுற்றிப்பார்க்க ரூ.50 மட்டுமே ல் விண்டேஜ் பேருந்தில் நாள் முழு விவரம்


சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக 'சென்னை உலா" பேருந்தினை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Discover Chennai’s heritage at your convenience! Chennai Ula – Vintage Hop-On Hop-Off Heritage Bus

சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து “சென்னை உலா” பாரம்பரியப் பெருமை மாறாத வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

 

சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக “சென்னை உலா” பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களான சென்ட்ரல் ரயில் நிலையம்,மெரினா,விவேகானந்தர் இல்லம், மைலாப்பூர் லஸ் கார்னர், அண்ணா மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட 17 இடங்களில் சென்னை உலா பேருந்துகள் வாரம் முழுவதும் மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் இயக்க திட்டமிட்டுள்ளனர் 

இதற்கான டிக்கெட் விலை ரூ50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



Give Us Your Feedback