Breaking News

கோவை கல்லூரியில் ஒரு தலைக் காதலால் வகுப்பறையில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்! நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

கோவை கல்லூரியில் ஒரு தலைக் காதலால் வகுப்பறையில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்! நடந்தது என்ன 



கோவை சரவணம்பட்டி தனியார் கல்லூரியில் வகுப்பறையில் வைத்து முதலாமாண்டு மாணவியை கத்தியால் குத்திய சக மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (18) . இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் ( KG ) கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் தன்னுடன் படிக்கும் 17 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் இருவரும் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் வகுப்பறையில் இருந்த போது ஹர்ஷவர்தன் வீட்டில் இருந்து எடுத்து வந்த கத்தியால் மாணவியை குத்தியதாக கூறப்படுகின்றது. 

இதில் மாணவியின் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவியை மீட்ட சக மாணவர்கள், அந்த கல்லூரி குழுமம் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனிமதிக்கபட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback