அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சேர வாய்ப்பில்லை எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சேர வாய்ப்பில்லை எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சேர வாய்ப்பில்லை - கூட்டணியில் சசிகலா, ஒ.பிஎஸ் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பதில்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாக கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி உறுதியாக தெரிவித்தார்.
கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாகவும், இது வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
டிடிவி தினகரன் இணைவாரா என்ற கேள்விக்கு, கூட்டணி இன்னும் வலுவடையும், நேரம் வந்தால் அனைவரையும் அழைத்து அறிவிப்பேன் என்று பதிலளித்தார்.
கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என தெரிவித்த எடப்பாடி, திமுக தவறான தகவல்களை பரப்புகிறது என குற்றம்சாட்டினார். 2026ல் திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள்
