பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் கட்டாயம் -தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இனி எந்தவொரு சொத்தையும் விற்பனை செய்யவோ அல்லது தானமாக வழங்கவோ பதிவு அலுவலகத்திற்குச் செல்லும்போது, அந்தச் சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசினுடைய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒப்புதலுக்காக அந்த மசோதா ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். தற்ப்போது அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஜனாதிபதி திரௌபதி மர்மு.
ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து அதற்கு மூலப்பத்திரம் இல்லையென்றால் அதற்கான வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும்
அந்த சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அத்துடன் அந்த சான்றை பத்திரப் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதென்றால், அந்த சூழலில் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றிதழைப் பெற வேண்டும். மேலும் கூடுதலாக ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து, அதன் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவில் மேஜர் மாற்றம்! இந்த ஆவணங்கள் முக்கியம்.. தமிழக அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்By Velmurugan PTime Updated: Monday, January 26, 2026, 14:31 [IST]Subscribe to Oneindia Tamilசென்னை: பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து 'கண்டறியமுடியவில்லை' என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும்.பதிவுச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத்திருத்தம் காரணமாக நில மோசடிகளைத் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :Major change in property registration The President approves the Tamil Nadu government s billஅசல் ஆவணங்கள் கட்டாயம்
இதற்கு முன், அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி பொய் புகார் அளித்தோ அல்லது நகல் ஆவணங்களை வைத்தோ முறைகேடாகச் சொத்துப் பதிவுகள் நடந்தன. இனி அப்படி பத்திரப்பதிவு செய்யவே முடியாது.இந்த சட்டம் மோசடிப் பத்திரப் பதிவில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. பொய்யான தகவல்களை அளித்து சொத்துப் பதிவு செய்பவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.Also Readகன்னியாகுமரியில் திமுக பேரூராட்சி துணை தலைவி.. நகைக்கடையில் கும்பலாக திருடி.. ஒரே அசிங்கம்கன்னியாகுமரியில் திமுக பேரூராட்சி துணை தலைவி.. நகைக்கடையில் கும்பலாக திருடி.. ஒரே அசிங்கம்விதிவிலக்குகள்சில குறிப்பிட்ட நேரங்களில் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் பதிவு செய்ய அனுமதி உண்டு:அரசு நிலங்கள்: அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிலங்களை மாற்றும்போது.நீதிமன்ற உத்தரவு: நீதிமன்றத்தின் மூலம் சொத்து விற்பனை நடக்கும்போது.பாகப்பிரிவினை: குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையின் போது ஒருவரிடம் மட்டும் அசல் இருந்தால் போதும் (மற்றவர்களுக்குச் சான்றளிக்கப்பட்ட நகல் தேவைப்படும்).Recommended For Youமேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா.. தமிழக அரசு முடிவால் என்ன நன்மை?மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா.. தமிழக அரசு முடிவால் என்ன நன்மை?பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:பாதுகாப்பு: உங்கள் அசல் ஆவணங்களை மிகப்பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தொலைந்து போனால், காவல்துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை' (Non Traceable Certificate) என்ற சான்றிதழ் பெறுவது உட்பட பல சட்ட நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த சட்டப்படி மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து 'கண்டறியமுடியவில்லை' என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்
