Breaking News

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு தற்காத்து கொள்வது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு தற்காத்து கொள்வது எப்படி முழு விவரம்



தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சிக்கன்குனியா Chikungunya பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நோய் பாதிப்பு பதிவாகி வருவதால், பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

சிக்குன்குனியா (Chikungunya) என்பது ஒரு வைரசால் பரவும் நோய் ஆகும். இந்த நோய்க்குக் காரணமான வைரஸ் Aedes வகை கொசுக்கள் மூலம் பரவுகின்றன.

அதாவது சிக்கன்குனியா டெங்குவை போல் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகின்றது. நன்னீரில் பெருகும் இந்த கொசுக்கள் பகல் நேரத்திலும் கடிக்கும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகின்றது

அறிகுறிகள்

காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 39 °C, (102.2 °F) அளவு வரைக்கும் காய்ச்சல் இருக்கக்கூடும். 

தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும், ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்.

சிக்கன்குனியாவின் ஆரம்ப அறிகுறிகளாக தீவிர காய்ச்சல், கடுமையான மூட்டு மற்றும் எலும்பு வலி, உடல் சோர்வு, தோல் அலர்ஜி போன்றவை காணப்படும். 

காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் டெங்கு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback