Breaking News

பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியில், 'மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு - பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் சூடான பொருட்களை உண்பதால் ஏற்படும் பாதிப்பு

அட்மின் மீடியா
0

பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் சூடான பொருட்களை உண்பதால் ஏற்படும் தீய விளைவுகளை ஆய்வு செய்யவுள்ளது சென்னை ஐஐடி.

சென்னை ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

ஒரு தாயின் கொடியைக் கூட பிளாஸ்டிக் மாசுபடுத்துகிறது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையை தீவிரமாக ஆராய வேண்டும் -உயர்நீதிமன்றம்

பிறந்த குழந்தைகளின் கொடியில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கு.




மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastics) என்றால் என்ன:-

மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastics) என்பது5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ள மிகச்சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் ஆகும். இவை நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

மைக்ரோ பிளாஸ்டிக்கை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

முதன்மை மைக்ரோ பிளாஸ்டிக்: அழகு சாதனப் பொருட்கள் (Face wash, Scrub) மற்றும் பற்பசைகளில் சேர்க்கப்படும் சிறிய 'மைக்ரோ பீட்ஸ்' (Microbeads).

இரண்டாம் நிலை மைக்ரோ பிளாஸ்டிக்: பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெயில் மற்றும் அலைகளால் சிதைவடைந்து உருவாகும் துகள்கள்.செயற்கை இழை துணிகள்: நாம் துணிகளைத் துவைக்கும்போது நைலான் மற்றும் பாலியஸ்டர் துணிகளிலிருந்து வெளியேறும் நுண் இழைகள்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள்

நீர்நிலை மாசு: இவை ஆறுகள் வழியாகக் கடலில் கலக்கின்றன. கடல் வாழ் உயிரினங்கள் (மீன், ஆமை) இவற்றை உணவு என நினைத்து உட்கொள்கின்றன.உணவுச் சங்கிலி: மீன்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கைச் சாப்பிடும்போது, அந்த மீன்களைச் சாப்பிடும் மனிதர்களின் உடலுக்குள்ளும் பிளாஸ்டிக் நுழைகிறது

மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்து

பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால், காபி, தேநீர் மற்றும் சூடான சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால் மனித ஆரோக்கியத்தில், மைக்ரோ பிளாஸ்டிக் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, மனிதர்களின் இரத்தம், நுரையீரல் மற்றும் தாய்ப்பாலில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்:ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படலாம்.உடலில் வீக்கங்கள் (Inflammation) உண்டாகலாம்.

செரிமான மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பைக் குறைக்க நாம் என்ன செய்யலாம்?பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரைத் தவிர்க்கவும்: குழாய் மூலமோ அல்லது கண்ணாடி பாட்டில்களிலோ தண்ணீர் குடிப்பது சிறந்தது.இயற்கை இழை துணிகள்: பருத்தி (Cotton) மற்றும் சணல் போன்ற இயற்கை இழைகளால் ஆன துணிகளைப் பயன்படுத்தலாம்.

ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் தவிர்ப்பு: 

பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.உங்களுக்குத் தெரியுமா? சராசரியாக ஒரு மனிதன் வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டு அளவிலான பிளாஸ்டிக்கை சுவாசம் மற்றும் உணவின் மூலம் உட்கொள்கிறான் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

வழக்கு:-

பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக, வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மைக்ரோ பிளாஸ்டிக் விவகாரத்தில் சென்னை ஐஐடி ஆய்வு நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஐஐடி ஆய்வு

மேலும் அவர், கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ததில், பிஸ்பெனால் ஏ எனும் பிபிஏ செறிவு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.15 மைக்ரோகிராம் வரை இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், ஒரு தாயின் நஞ்சுக் கொடியைக் கூட பிளாஸ்டிக் மாசுபடுத்துகிறது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையை தீவிரமாக ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags: தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback