Breaking News

தமிழகத்தின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது..எந்த காவல்நிலையம் தெரியுமா

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது..எந்த காவல்நிலையம் தெரியுமா



குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடத்தப்பட்டது. 

காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார் அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. அடுத்தாக ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் சென்றனர். 

அதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்துச் சென்றது.

அதனை சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. 

குற்றங்களை குறைத்தல் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் முதல் பரிசு 

மதுரை மாநகரத்தைச் சேர்ந்த ஜெயந்திபுரம் காவல் நிலையத்திற்கு முதல் பரிசுக்கான கோப்பை காவல் ஆய்வாளர் பூமிநாதன் பெற்றார். 

திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு இரண்டாம் பரிசிற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் பிரேமா பெற்றார். 

கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு மூன்றாம் பரிசிற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் சின்ன கமணனுக்கு வழங்கப்பட்டது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback