Breaking News

பொது மற்றும் தனியார் இடங்களில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.

அட்மின் மீடியா
0
பொது மற்றும் தனியார் இடங்களில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நிறுவுவது சம்பந்தமான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.

அரசியல், மதம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பம் நிறுவுதல் சம்பந்தமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்கள், சாலை ஓரங்கள், சந்திப்புகள், அரசு மற்றும் தனியார் நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் உரிய அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் நிறுவுவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை, வனத்துறை, பொதுப்பணித்துறை நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய மாவட்ட அளவிலான மற்றும் உட்கோட்ட அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நிறுவ விரும்பும் ஏற்பாட்டாளர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மனு அளித்து மேற்படி கமிட்டியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கோரிக்கை மனுவில் இடம், எண்ணிக்கை, கால அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். சாலையோர சந்திப்புகள், நடைபாதைகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் கொடிக்கம்பம் நிறுவ அனுமதி வழங்கப்படாது.

மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று நடத்தும் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி முடிந்த உடன் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் தற்காலிக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் நிறுவினாலோ அல்லது விதி மீறலில் ஈடுபட்டாலோ கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

*விழா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback