திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து 600க்கும் மேற்பட்ட டூ வீலர்கள் எரிந்து சாம்பல்
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து 600க்கும் மேற்பட்ட டூ வீலர்கள் எரிந்து சாம்பல்
கேரள மாநிலம் திரிச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 600 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு (Platform 2) மிக அருகில் அமைந்துள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்தான் முதலில் தீ பிடித்துள்ளது.வெயில் மற்றும் வாகனங்களில் இருந்த எரிபொருள் காரணமாக, தீ மிக வேகமாகப் பரவி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 600 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுகளாக மாறின. அதுமட்டுமன்றி வாகனங்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில் என்ஜின் ஒன்றும் தீயில் சிக்கியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சூர் மாவட்ட தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து நடந்தபோது ரயில் பயணிகள் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாகத் தீ பிடித்ததா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்