Breaking News

இன்றைய 28.01.2026 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News HeadLines Today

அட்மின் மீடியா
0

இன்றைய 25.01.2026 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today 

இன்று 28.01.2026 புதன்கிழமை இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today


📢 தமிழக செய்திகள்:-

திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-வது அலகில் வணிக ரீதியிலான முழு மின் உற்பத்தி இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

70 வருட சினிமாவில் நாம் அவர்களை (இஸ்லாமியர்களை) கார்னர் செய்து பல படங்கள் எடுத்துவிட்டோம். நாம் அவர்களை நிறைய குத்தி கிழித்திருக்கிறோம். அதை எல்லாம் மொத்தமாக சரி செய்ய முடியுமா என்றால், முடியாது. சுதந்திர காலகட்டத்தில் இருந்து, சமகால போராட்டங்கள் வரை எல்லா போராட்டத்திலும் உடன் அவர்கள் நின்றனர். (சினிமாவில்) அவர்களுக்கு ஆதரவாக சொல்லாவிட்டாலும், எதிராக சொல்லிவிடாதீர்கள். அது இன்று இருக்கும் சூழலில் மிகப்பெரிய ஆபத்தாகிவிடும்” - இயக்குநர் தமிழ்

இந்தியாவிலேயே முதல்முறையாக சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; முன்னோடி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உயர் பொறுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வரவேண்டும்; சமூகத்தின் முதுகெலும்பாக பெண்கள் இருப்பதாகவும் மகளிர் உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியை 2ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், திருச்சி திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர் கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திருச்சியில் கருத்துகளை கேட்டறிந்தது

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பட தணிக்கை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், சென்சார் சான்றிதழ் குறித்து மீண்டும் பரிசீலிக்க வழக்கை திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

தமிழகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, மதுரை மற்றும் சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

✍🏻இந்திய செய்திகள்

மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் பாரம்பரிய 'ஹல்வா விழா' இன்று நிதி அமைச்சகத்தில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்துகொண்டார். 

ராஜஸ்தானின் நாகவுர் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ வெடிபொருட்களை (Ammonium Nitrate) போலீசார் அதிரடியாகக் கைப்பற்றினர். 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 6,000 கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு 'மகாத்மா காந்தி பெயர்' சூட்டப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் அறிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை சட்டப்பூர்வமாக அறிவிக்கும் மசோதா, நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

வட இந்தியாவில் நிலவும் கடும் குளிர் மற்றும் 'மேற்கத்திய இடையூறு' காரணமாக டெல்லியில் இன்று மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளார். அப்போது சுமார் ₹17,500 கோடி மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் எம்பிரேயர் (Embraer) நிறுவனம் மற்றும் அதானி குழுமம் இணைந்து இந்தியாவில் விமானத் தயாரிப்பு ஆலையை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று(ஜன.28) தொடங்குகிறது . பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும் நிலையில் முதற்கட்ட கூட்டத் தொடர் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தொடர் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பியா வர்த்தக ஒப்பந்தத்தால் வேளாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்ப்பு. புதிய ஒப்பந்தத்தால் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களின் விலை குறையும்; ஆலிவ் ஆயில், பிரிமீயம் ஒயின்கள் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

காஷ்மீரில் நீடிக்கும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு. தோடா மாவட்டத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 60 பேர் பத்திரமாக மீட்பு.

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்; எஸ்ஐஆர், ஜி ராம் ஜி சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் பல்வேறு துறைகளில் இந்தியா தடையற்ற ஒப்பந்தம்; அதிக வரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியனுடன் கை கோத்த இந்தியா

இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக 3 ஒப்பந்தம், உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும்; பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி உறுதி

இந்தியாவுடனான ஒப்பந்தம் அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா கருத்து; தடையற்ற வணிக ஒப்பந்தமானது இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல் எனவும் பாராட்டு

🌍உலக செய்திகள்

ஈரானைத் தாக்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்குக் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன.

வங்கதேசத்தில் மரண தண்டனை: கடந்த கால போராட்டங்களை ஒடுக்கிய வழக்கில் 3 வங்கதேச அதிகாரிகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

27 ஆண்டுகால சாதனைப் பயணத்திற்குப் பிறகு, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

சீன ராணுவத்தில் விசாரணை: அணு ஆயுத விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 2 உயர்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமேசான் ஆட்குறைப்பு: உலகெங்கிலும் உள்ள சுமார் 16,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கப்போவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🏛️அரசியல் செய்திகள்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம்: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

யுரேனியம் ஒப்பந்தம்: கனடா பிரதமர் இந்தியா வர உள்ள நிலையில், சுமார் ₹17,500 கோடி மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய பட்ஜெட் 2026: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை திமுக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்.

கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்; 2 மாதங்களாக காத்திருக்கிறோம்; கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது; திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்

அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய பாஜக அரசு; மன்னர் காலத்திற்கு நாட்டை கொண்டுசெல்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடல்

🏏 விளையாட்டு செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் | 4வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், முதல் வெற்றியை NZ பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback