இன்று 25.01.2026 சனிக்கிழமை இன்றைய நாளைன் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today
📢 தமிழக செய்திகள்:-
ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆளுநர் உரையோடு தொடங்கிய கூட்டம், உரைக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வரின் பதிலுரையோடு ஒத்திவைப்பு.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மலையேற, பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி: வனத்துறை அறிவிப்பு
மதுரை: கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்ற ஆம்னி பேருந்து மீது மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பயணிகள் உயிரிழப்பு. இரு பேருந்துகளிலும் இருந்த 15 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால், காபி, தேநீர் மற்றும் சூடான சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவியை நாடியுள்ளது அரசு.
பிறந்த குழந்தைகளின் கொடியில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். "அன்றும் இன்றும் என்றும் இந்திக்குத் தமிழகத்தில் இடமில்லை" என்று முதல்வர் தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர், பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்.பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்க அறிக்கை
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். பிப்.1ம் தேதி காலை, மாலை மதுரை - பழனிக்கு முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே
பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்குவதற்கு கண்டனம். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு. அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: சென்னை காவல் ஆணையர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கைதி ஒருவரை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அரிசி பறிமுதல்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கடத்த முயன்ற 1.7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
2026 சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை (ஜனவரி 26) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் இன்று காலை இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகைகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
✍🏻இந்திய செய்திகள்
தெலுங்கானாவில் இன்று முதல் வாங்கப்படும் புதிய பைக்குகள் மற்றும் கார்கள் ஷோரூம்களிலேயே நேரடியாகப் பதிவு செய்யப்படும். ஆர்டிஓ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ₹10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பஞ்சாப் அரசு வழங்குகிறது.
குடியரசு தின விழா 2026: நாளை (ஜனவரி 26) நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி மற்றும் மாநிலத் தலைநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
சத்தீஸ்கர்: கோர்பா மாவட்டத்தில் சுமார் 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒரே இரவில் திருடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத அந்தப் பாலத்தை, 15 பேர் கொண்ட கும்பல் கேஸ் கட்டர்கள் மூலம் துண்டு துண்டாக வெட்டித் திருடியுள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பத்ம விருதுகள் 2026: இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் இன்று மாலை மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளன. கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணியில் சிறந்த விளங்கியவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று ரயிலில் யாசகம் பெற வைத்து, குழந்தையை விற்பனை செய்த முருகன் - மரியம்மா தம்பதி கைது! சுசித்ரா, மஸ்தான் தம்பதியினர் அளித்த புகாரில், குழந்தையை கடத்திய இருவர், குழந்தையை வாங்கிய 4 பேர் என மொத்தம் 6 பேர் கைது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
குஜராத்தில் நிர்வாகப் பணி என்ற பெயரில் திட்டமிட்ட 'வாக்குத் திருட்டு' நடைபெறுவதாக ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
🏛️அரசியல் செய்திகள்
இரண்டு நாள் பயணமாக ஜன. 28,29 ஆம் தேதிகளில் தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.கே. சேகர்பாபுவைச் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக-வுடன் அவர் இணைய வாய்ப்புள்ளதா என்ற ஊகங்களைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தேர்தலுக்கான 'விசில்' சின்னம் குறித்த ஆலோசனைகள் இதில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால், மகனுடன் ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு. பாஜக சலவை இயந்திரத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக விமர்சனம்.
மத்திய பாஜக அரசு ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளை முடக்குவதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட மோதலை அவர் "ஜனநாயக விரோதம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை திமுக அமைத்துள்ளது. "மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டு அறிக்கை தயார் செய்யப்படும்" எனத் தலைமை அறிவித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.எல்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்.
🌍உலக செய்திகள்
அமெரிக்காவின் மினியாபொலிஸில் மேலும் ஒருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர். குடியேற்ற துறை அதிகாரிகளை கண்டித்து பெருந்திரள் போராட்டம் வலுக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சென்னை-துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை: சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கனடா மீது 100% வரி (Tariff) விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.கனடாவை 51-வது மாநிலமாக இணைக்க யோசனை: கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியைத் தொடர்ந்து, கனடாவையும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக ஏன் மாற்றக்கூடாது என டிரம்ப் கிண்டலாகக் கேள்வி எழுப்பியது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மினசோட்டா துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவின் மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்தியப் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்போர்க்கப்பல்கள் குவிப்பு: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் கடல்வழி அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது நவீன போர்க்கப்பல்களை ஈரானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் குவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் நிலவுகிறது.
அபராத வரி: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு 25% அபராத வரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்புதிய கிராமங்கள் ஆக்கிரமிப்பு: உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மேலும் ஒரு கிராமத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு உதவத் தயார் என அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
நேட்டோவுடன் மோதல்: ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பை "முட்டாள்கள்" என்று டிரம்ப் சாடியுள்ளது ரஷ்யாவுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர்; 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்..
🏏 விளையாட்டு செய்திகள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடருக்காக எம்.எஸ். தோனி ராஞ்சியில் உள்ள மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சிஎஸ்கே (CSK) ரசிகர்கள் "மீண்டும் ஒருமுறை கோப்பை நமதே" என உற்சாகத்தில் உள்ளனர்.
சிஎஸ்கே வீரருக்கு காயம்: சமீபத்திய ஏலத்தில் 14.2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் பிரஷாந்த் வீர், ரஞ்சி கோப்பை போட்டியின் போது காயமடைந்தது அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது
🌦️ வானிலை செய்திகள்
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதாகவும் வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.