லயோலா கருத்து கணிப்பு வெளியீடு 2026ல் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் விஜய்க்கு 2வது இடம்..!
லயோலா கருத்து கணிப்பு வெளியீடு 2026ல் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் விஜய்க்கு 2வது இடம்..!
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது. அதன் முடிவுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்-அமைச்சராக வரும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளனர். இதில் 2-வது இடத்தை விஜய்யும், 3-வது இடத்தை எடப்பாடி பழனிசாமியும் பெறுகின்றனர்.
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவக்கினர்.
70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, ஜூன் மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி , தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும், அண்ணாமலைக்கு 5- ஆம் இடமும் கிடைத்துள்ளது.
தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அ
புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதல் இடமும், அண்ணாமலைக்கு 2-ஆம் இடமும், உதயநிதிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும் கிடைத்துள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 'ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி, தவெக தலைவர் விஜய் 2ம் இடம் பிடிப்பார். விஎன கூறப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
