மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூசன், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருது 131 பேருக்கு அறிவிப்பு முழு பட்டியல் இதோ padma awards 2026 full list
குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டின் மிகவும் உயரிய விருது என்றால் அது பாரத ரத்னா. இதற்கு அடுத்ததாக பத்ம விருதுகள் உள்ளன.
விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது,
13 பேருக்கு பத்ம பூஷன் விருது,
5 பேருக்கு பத்ம விபூஷன் விருது
என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பல்வேறு துறைகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விருது பெறுபவர்களின் பட்டியல்
மருத்துவத்துறையில் கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது
மருத்துவத்துறை பிரிவில் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது
மருத்துவத்துறை பிரிவில் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது
சமூக சேவைக்காக எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்ம பூஷண் விருது
கலைத்துறை பிரிவில் காயத்ரி பாலசுப்ரமணியன்
கலைத்துறை பிரிவில் மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது
கலைத்துறை பிரிவில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் பத்மஸ்ரீ விருது
கலைப்பிரிவில் ஸ்ரீ ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீவிருது
கலைத்துறை பிரிவில் ரஞ்சனி பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ விருது
கலைப்பிரிவில் திருவாரூர் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது.
அறிவியல் மற்றும் இன் ஜினியரிங் பிரிவில் கே.ராமசாமி பத்ம ஸ்ரீ விருது
அறிவியல் மற்றும் இன் ஜினியரிங் பிரிவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது
சிவில் சர்வீஸ் பிரிவில் கே.விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது
இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது
மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், பி.நாராயணன், வி.எஸ்.அச்சுதானந்தன் மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
மொத்த பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.padmaawards.gov.in/Document/pdf/Notifications/PadmaAwards/PadmaAwards2026.pdf
Tags: தமிழக செய்திகள்
