ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு வீடியோ இணைப்பு tvk erode meeting vijay speech
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு வீடியோ இணைப்பு tvk erode meeting vijay speech
தவெக தலைவர் விஜய் உரையின் சுருக்கம்
வள்ளுவர்கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டாதது ஏன் ?
திமுக கவர்ன்மெண்ட் நடத்துறாங்களா ? கண்காட்சி நடத்துறாங்களா ?
தவெக ஒரு பொருட்டே இல்லாத போது அதனைப் பார்த்து கதறுவது ஏன் ?
மாறுவேசத்தில் மரு வைத்துக் கொண்டு மீடியாவுல உங்கள் ஆட்களை வைத்து பேசுவது மக்களுக்கு தெரியும்
திமுகவுக்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு என்மீது எல்லையில்லாத பாசம் வைத்திருக்கும் மக்கள் தான் துணை
பெரியார் பெயரை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் தான் நம் அரசியல் எதிரிகள்
எதிரிகள் யார் என்பதை சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அவர்களை மட்டுமே எதிர்ப்போம் களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்க முடியாது.
நான் எத்தனை நிமிடங்கள் பேசினால், எப்படி பேசினால் உங்களுக்கு என்ன ? அதில் இருக்கும் விசயத்தை மட்டும் பாருங்கள் ?தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு நன்றாகவே வரும். வேண்டாம் என விட்டுவைத்துள்ளேன்
மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என சொல்கிறீர்கள் ?மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான். விஜய் மக்கள் பக்கம், மக்களும் என் பக்கம் தான்
நாங்கள் வாயிலேயே வடை சுடுவதற்கு திமுக அல்ல.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சமரமே இருக்காது. மக்கள் தைரியமாக இருக்கலாம்
எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி திமுகவை காலி செய்ததை போல நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி
செங்கோட்டையனை போலவே இன்னும் பலர் தவெகவில் இணைய உள்ளார்கள் எப்போது பார்த்தாலும் நான் பேசுவதை சினிமா டயலாக் போல இருப்பதாக சொன்னார்கள் ஆனால் முதலமைச்சர் அண்மையில் பேசிய என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என பேசியது சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததா ?
என அதிரடியாக பேசினார்
முழு பேச்சு:-
நல்ல காரியத்தை தொடங்கும் முன் மஞ்சள் எடுத்து வைத்தே தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி VIBE தான். நம் கொடியில் கூட மஞ்சள் நிறம் உள்ளது.ஈரோடு விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பது காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய். எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சூழ்ச்சிகார கூட்டம் ஒன்று தொடர்ந்து அதை செய்து வருகிறது. ஈரோடு மண்ணில் மகத்தான மனிதரை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.
எல்லாத்தையும் விட்டு விட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன். நான் சினிமாவுக்கு வந்த 10 வயதில் இருந்து இந்த மக்களுடனான உறவு தொடங்கியது. எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நானும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டுமே அடித்து விடுகின்றனர்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?ஈரோடு கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி.பொது வாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா சம்பாதிக்காதவர் பெரியார்.
தந்தை பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம்.அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள். உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை.
அண்ணாவும் MGR-ம் தமிழ்நாட்டோட சொத்து அத பயன்படுத்த யாரும் இங்க COMPLAINT எல்லாம் பண்ண முடியாது.அண்ணா எங்களோடது MGR எங்களோடது நீங்க எல்லாம் எடுத்துக்க முடியாது என யாரும் சொல்ல முடியாது..நாங்க ஒரு வழில அரசியல் செஞ்சிட்டு போயிடு இருக்கோம்.உங்களுக்கு தான் tvk ஒரு பொருட்டே இல்ல தானே அப்புறம் ஏன் கதறுறீங்க.. ஏன் புலம்பி தள்ளிட்டு இருக்கீங்க. இது எப்படி இருக்கு தெரியுமா எனக்கு பயம் இல்ல எனக்கு பயம் இல்ல அப்படி சத்தமா பாடிகிட்டு சின்ன பசங்க மாதிரி நடுங்கிட்டு போற மாதிரி இருக்கு. மொதல்ல மண்டைல இருக்கிற கொண்டையை மறைங்க சார்.
இப்போ ஈரோடு பக்கம் இருக்கிற பிரச்னையை பத்தி பேசுவோம்மஞ்சள் நகரத்திற்கும் ஒன்னும் பண்ணல.. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்னும் பண்ணல இது வரைக்கும் என்ன செஞ்சி இருக்காங்கனு பார்த்தா ஒரு பெரிய ஸிரோ தான்..கரும்புக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் பண்றாங்க அதுலயும் பல பிரச்சனை. நெல் கொள்ளுதல் செய்யுறதுல ஊழல்.24 /7 அவங்க யோசனை என்ன தெரியுமா இந்த விஜய்யை எப்படி முடக்கலாம். தமிழக வெற்றி கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம். அப்படி தான் அவங்களோட சிந்தனையேபவானி நொய்யல் ஆறு அமராவதி இணைப்பு திட்டத்திற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடல வாக்குறுதி நம்பர் 103 ..சொன்னீங்களே செஞ்சாங்களா..?ஆறுகளை சுத்த படுத்த பல ஆயிரம் நிதி ஒதுக்குவோம்...ஆற்றை சுத்த படுத்துவோம் சொன்னாங்களே செஞ்சாங்களா..? ஆன ஆற்று மணல் கொள்ளையை மட்டும் சரியா செய்வாங்க.
கொஞ்சம் அசந்தா பல மாவட்டங்களில் மணல் காணாமல் போன மாதிரி மழை காணாமல் போன மாதிரி நம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற செம்மண் காணாமல் போக வாய்ப்பு இருக்கு மக்களே...நம் மண்ணுக்கும் நம் விவசாயிகளுக்கும் தான் இந்த மோசமான நிலைமை.நம்மளும் கத்துறோம் போராடுறோம் இவங்க ஏதாவது கண்டுக்கிறாங்களா. கொஞ்சம் யோசிங்க...
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போய் மக்கள் பிரச்சனை பேசிட்டு வரேன்.. இது அரசியல் இல்லையா..? அப்ப எது அரசியல்.. உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா அசிங்க அசிங்கமா பேசுறது தான் அரசியல்னா அந்த அரசியல் நமக்கு வராது. வராதுனா...... நல்லாவே வரும் உங்களை விட எனக்கு நல்லாவே வரும்.. வேணாம்னு விட்டு வெச்சி இருக்கோம். அப்ப உங்களுக்கு நமக்கும் என்ன வித்தியாசம்.
காஞ்சிபுரத்துல நாங்க சொன்னது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு இப்ப சொல்றேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது,மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது.மக்கள் காசுல மக்களுக்கு செய்யுறதுல எப்படி இலவசம் சொல்லுவீங்க. அப்படி கொடுத்தது ஓசி ல போறேன் ஓசி ல போறேன் அசிங்க படுத்துறீங்க .என்ன கேக்குறது ஆள் இல்லை நினைசீங்களாமக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்..இந்த விஜய் கேள்வி கேட்பான்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=4z2rvDGKzSY
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்