Breaking News

இன்றைய முக்கிய செய்திகள் TODAY HEADLINES

அட்மின் மீடியா
0

 இன்றைய முக்கிய செய்திகள் TODAY HEADLINES 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவர் தவறுதலாக விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க வேண்டும். திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்.

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா இன்று (22.12.25) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரத்தில் நடக்கிறது. QR Code அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று (டிச.22) பேச்சுவார்த்தை. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்; பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்வு. மெயில், விரைவு, ஏ.சி. ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிப்பு.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமலுக்கு வந்தது விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம். மாநிலங்களுக்கு 40 விழுக்காடு நிதிச்சுமை ஏற்படுத்தும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

வரும் 25ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுக்க புத்தாண்டில் மேலும் தீவிர நடவடிக்கை. அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று| அதிரடி சோதனை நடத்த ட்ரம்ப் அரசு திட்டம்.

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தை நாளை (23.12.25) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிப்பு. பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட வசதியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பூத் எண் 76ல், 2 வாக்காளர்களின் பெயர் மட்டும் இந்தியில் இருப்பதால் சர்ச்சை! தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் இது எப்படி சாத்தியம்? அப்படியானால் டைப் செய்யும் பணி இங்கே நடக்கிறதா அல்லது வெளிமாநிலத்தில நடக்கிறதா? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி.

தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.தப்புக் கணக்கு போடுபவர்களின் முகத்தில் மக்கள் கரியைப் பூசுவார்கள் என்றும் விமர்சனம்.

சாதி, மதங்களின் பெயரால் சண்டைகள் உருவாக அனுமதிக்க கூடாது என டிடிவி தினகரன் கோரிக்கை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய விஜய்க்கு, நயினார் நாகேந்திரன் மறைமுக அழைப்பு. இருமுனைப் போட்டியில் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்று, விஜய் உணர வேண்டுமென அறிவுறுத்தல்.

அசாமில் வங்கதேசத்தவர்களை சட்டவிரோதமாக காங்கிரஸ் குடியேற்றியுள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. ஊடுருவல்காரர்களை தடுக்காமல் டபுள் என்ஜின் அரசு தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரமே இருளில் மூழ்கியதால், மக்கள் தவிப்பு. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, படிப்படியாக மின் வினியோகம் தொடக்கம்.

இளையோர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. 191 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 2,400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள, வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை இன்று திறந்து வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சென்னை மாநகராட்சி இதனை அமைத்துள்ளது. சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்குத் தேவையான பாய், தலையணை மற்றும் போர்வை உள்ளிட்டவைகளும் வழங்கப்படவுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,811 கோடி நன்கொடை பாஜகவுக்கு ரூ.3,112 கோடி, காங்கிரசுக்கு 299 கோடி, திமுகவுக்கு ரூ.10 கோடி கிடைத்திருப்பதாக தகவல்

அடர்த்தியான பனி மூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 110 விமானங்கள் ரத்து 370க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி - 288 நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அபாரம்

கேரள மாநிலம் சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் - இருமுடி கட்டி 18ஆம் படியேறி வந்து பக்தர்கள் வழிபாடு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முதல்வர் பதவி விவகாரத்தில், மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் - உள்ளூர் பிரச்சனைக்கு மேலிடத்தை எதிர்பார்க்க கூடாது என கைகழுவினார் மல்லிக்கார்ஜூன கார்கே

H-1B விசா வைத்துள்ள ஊழியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் அறிவுறுத்தல் - சமூக ஊடகக் கட்டுப்பாடு காரணமாக, H-1B உள்ளிட்ட பிற விசா நீட்டிப்புக்கு ஓராண்டு வரை தாமதம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை

மீண்டும் புதிய உச்சம் தொட்டது முட்டை கொள்முதல் விலை. 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம்

காந்தியடிகள் பெயரிலான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றும் சர்ச்சைக்குரிய மசோதா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம். மலையில் தீபம் ஏற்றுவோம் எனக் கூறி, இந்து அமைப்பினர் திரண்டதால் நீடித்த பரபரப்பு

அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்மத்திய அரசிடம் தனியார் உரிமம் பெற்று அணுமின் நிலையங்களை இயக்கவும் பராமரிக்கவும் மசோதாவில் வழிவகை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback