Breaking News

SIR வாக்காளர் படிவங்களை ஒப்படைக்க 11 ம் தேதி கடைசி நாள் SIR Form Fill Last Date

அட்மின் மீடியா
0

SIR வாக்காளர் படிவங்களை ஒப்படைக்க 11 ம் தேதி கடைசி நாள் SIR Form Fill Last Date

பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை ஒப்படைப்பதற்க்கு டிச.11 கடைசி நாள்

வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 16, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது




எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது

மேலும் 2002/2005 வாக்காளர் பட்டியலில் தனது பெயரோ அல்லது உறவினரின் பெயரோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை மட்டும் நிரப்பி SIR படிவத்தை ஒப்படைத்தாலும் அவர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் படிவம் தந்தால் தான் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்

இத்தகைய சந்தர்ப்பங்களில் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களை ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்படும்.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூன்று முறை வீட்டுக்கு வந்தும் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்க முடியாத பட்சத்தில் அவ்வாக்காளர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

டிசம்பரில் வெளியாகும் வரைவு பட்டியலில் பெயர் இடம் பெறாவிட்டால் உரிமை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில் படிவம் 6, படிவம் 8 மற்றும் உறுதிமொழிப்படிவம் ஆகியவற்றை தந்து பெயரை புதிதாக சேர்க்கலாம். 

இச்சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.அதற்கான அறிவிப்பு தரப்படும்.

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback