2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு Naam Tamilar Katchi candidate list 2026
2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தனித்துப் போட்டி என சீமான் அறிவித்த நிலையில் முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். இதில் 12 பொது தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்றும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் களஞ்சியம் மற்றும் மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம், மொத்தம் 234 தொகுதிக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்