2 மாத வாடகை தான் முன் பணம், வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் உரிமையாளருக்கு 5000 அபராதம், வாடகைக்கு குடியேறுவோருக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் புதிய விதிமுறைகள் முழு விவரம்
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.
- இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது
- வணிகக் கட்டிடங்களுக்கு அதிகபட்சம் 6 மாத வாடகை வரை முன்பணம் பெற அனுமதி.
- வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
- வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாத உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம்
- ஒப்பந்தம் செயல்படத் தொடங்கிய 12 மாதங்களுக்குப் பிறகு மட்டுமே வாடகை உயர்த்தப்பட முடியும்.
வாடகை உயர்வை 90 நாட்களுக்கு முன்னதாகவே வீட்டு உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
அத்தியாவசியப் பழுதுகளை உரிமையாளரிடம் தெரிவித்தும் அவர் 30 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால், குடியிருப்போர் தாங்களே சரிசெய்து, அதற்கான செலவை வாடகைத் தொகையில் கழித்துக் கொள்ளலாம்.
உரிமையாளர் வீட்டிற்குள் செல்ல வேண்டுமெனில் வாடகைதாரருக்கு 24 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வமாக தகவல் கொடுக்க வேண்டும்
வாடகைத் தகராறு மற்றும் வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்குகள் 2 மாதங்களில் தீர்க்கப்படும்.
சரியான காரணமின்றி வாடகைதாரரை காலிசெய்யச் சொல்ல முடியாது; வாடகை செலுத்தாமல் இருத்தல், வீட்டிற்கு சேதம் செய்தல் போன்ற சூழல்கள் மட்டுமே பொருத்தமானவை.
வாடகைதாரர்கள் கட்டாயம் போலீஸ் சரிபார்ப்புக்கு (Police verification) உட்படுத்தப்பட வேண்டும்.
- வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் வர உள்ளது
முன்பு வீடு வாடகைக்கு விட்டால், சாதாரண ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலே போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது ஒப்பந்தத்தை இரண்டு மாதத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும் அரசின் இணையதளத்தில் டிஜிட்டல் முத்திரையிட்டு ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.
இரண்டு மாத வாடகைக்கு மேல் வைப்புத் தொகையாகப் பெற முடியாது. வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது.
வாடகைதாரரை மிரட்டுவதற்காக மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டிப்பது அச்சுறுத்தும் செயல்கள் சட்டப்படி குற்றமாகும்.
வாடகை தீர்ப்பாயத்தின் உத்தரவின்றி, சட்டப்படி குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல், வெளியேற்ற முடியாது. உரிமையாளரின் தனிப்பட்ட கோரிக்கையால் மட்டும் வெளியேற்ற முடியாது
Tags: தமிழக செய்திகள்
