Breaking News

போராட்டத்தில் போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்… வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

போராட்டத்தில் போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்… வைரலாகும் வீடியோ



தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில், அதையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், போலீசாருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, அங்கே இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/ThanthiTV/status/1997642955574624475

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback