கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முன்னாள் MLA தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் முழு விவரம்
சு. முத்துக் கிருஷ்ணன் (S. Muthukrishnan) தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1980ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற முத்துகிருஷ்ணன். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில், தவெக நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட முத்துக்கிருஷ்ணன், விஜய்யை தலைவராக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
1980ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர், 35,613 வாக்குகள் பெற்று 47 சதவீத வாக்குகள் உடன் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்