Breaking News

தனிக்கட்சி தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின் Latchiya Jananayaga Katchi

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பமாக, பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அதிரடியாக அரசியலில் களமிறங்கியுள்ளார்

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் சபையின் உலகளாவிய மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் பெயரை அறிவித்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின். 

விரைவில் கட்சி தொடக்க விழா நடைபெறும் எனவும், அதில் கட்சியின் கொடி, கொள்கை ஆகியவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம். பழைய ஊழல் கட்சிகளை சுமக்க விருப்பமில்லை. தவெக தலைவர் விஜய் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்க தயார் என ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளரிடம் கூறியது குறிப்பிடதக்கது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback