இன்றைய முக்கிய செய்திகள் HEADLINES Today
அட்மின் மீடியா
0
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணிவு இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சட்டமன்ற தேர்தலுக்கான, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆறாம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக சார்பில் இதுவரை எங்களிடம் பேசவில்லை பாமக நிர்வாகி ஜி.கே.மணி
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று 24.12.2025 (புதன் கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது-
குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தவெகவினர் பங்கேற்றதால் கிறிஸ்துமஸ் விழாவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்த நிலையில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜுவுடன் காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சந்தித்து பேசி மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வரும் 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு, 27ஆம் தேதி வரை அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கணிப்பு.
2027ஆம் ஆண்டுக்குள் தைவானை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா எச்சரிக்கை. தங்கள் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டுமென சீனா பதிலடி.
தவெக தலைவர் விஜய் தனியாக நிற்பதைவிட அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே வெற்றி எளிதாகும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்
லண்டனில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு. பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததாக புகார்.
கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமானில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல் 4 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 95 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
தமிழ்நாட்டில் இ.பி.எஸ் தலைமையில் சட்டமன்ற தேர்தலை தங்கள் கூட்டணி எதிர்கொள்ளும் என பியூஷ் கோயல் திட்டவட்டம் - இளைஞர்களின் நம்பிக்கையை பெறுவது பற்றி பேசியதாகவும் பேட்டி
இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருக்கும் வரை கூட்டணியில் இணையப் போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து - அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணையத் தயார் என்றும் அறிவிப்பு
தூத்துக்குடி த.வெ.க. மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் - தனக்கு பொறுப்பு வழங்க கோரி பெண் பிரமுகர் அஜிதா ஆக்னல் போராட்டம் நடத்திய நிலையில் விஜய் அறிவிப்பு
புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூ.4,034.34 கோடி நிவாரண உதவி அறிவித்த பிரதமர் மோடி - இந்த உதவி, இந்தியாவின் ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிப்பதாக, அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்
போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஷேக் ஹசீனா மேற்கொண்டதாக குற்றச்சாட்டு பதிவு - இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர் கட்டாயமாக காணாமல் போனவராகவும் அறிவிப்பு
அதிக சம்பளமும், திறமையும் உள்ளவர்களுக்கு H-1B விசாவில் முன்னுரிமை அளிக்க அமெரிக்க அரசு முடிவு - புதிய விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு
கிறிஸ்துமஸையொட்டி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், துணை தூதரகம் அலுவலகங்களுக்கு 3 நாள்களுக்கு விடுமுறை வழக்கமான விசா, குடிமக்கள் சேவைகள் வழங்கப்படாது எனவும் தகவல்
வங்கதேசத்தை இந்தியா தாக்கினால் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கட்சியின் இளைஞர் அணி தலைவர் உஸ்மானி கொக்கரிப்பு
பாசிச சக்திகளால் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறன் திமுகவுக்கு உள்ளதாக பெருமிதம்.
தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக முதற்கட்ட பேச்சுவார்த்தை. பாரதிய ஜனதா கட்சி 70 தொகுதிகளை கேட்டதால் அதிமுக அதிர்ச்சி.
பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை என ஓபிஎஸ் தரப்பு தீர்மானம். வரும் தேர்தலில் பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்றும் எச்சரிக்கை.
அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இன்று காலை 8.54 மணிக்கு விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. LVM3-M6 ராக்கெட் கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது.
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை.
Tags: தமிழக செய்திகள்