இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் headlines today
இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் headlines today
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று (டிச.17) லக்னோவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான மார்ச் மாத டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் 18ஆம் தேதி வெளியீடு. 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் தகவல்
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று (டிச.17) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிப்பு. காலை 10 மணி வரை ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை நாளை முதல் டிச.21 வரை வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட விவகாரம்...விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் பிஸ்வாஸ் ராஜினாமா.
தமிழ்நாடு அரசின் சார்பில் புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்காக சுமார் ரூ.39.20 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி
அரசுப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி. திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி.திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்; மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் மாற்றத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு. நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம். தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் அன்புமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம். ராமதாஸ் தலைமையில் கூடுகிறது மாநில நிர்வாகக்குழு கூட்டம்
டெல்லியில் மாசுக் கட்டுப்பாடு தரச் சான்றிதழ் இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள். புதிய கட்டுப்பாடு தலைநகரில் நாளை முதல் அமல்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பைக், கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் டிச.22இல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக அறிவிப்பு "மதவெறி அரசியலை பரப்பும் சனாதனக் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்; திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம், அமைதியை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி சனாதன சக்திகளை முறியடித்து தமிழ்நாட்டை பாதுகாப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்” -விசிக தலைவர் திருமாவளவன்
Tags: தமிழக செய்திகள்
