இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Headlines Today
இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Headlines Toady
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 'விபி-ஜி ராம் ஜி' மசோதா 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவு 12.15 மணி அளவில் குரல் வாக்கெடுப்பு மூலம் | மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலமே நிறைவேறியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது! 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு. லக்னோவில் நடக்கவிருந்த 4வது போட்டி புகை கலந்த பனிமூட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் SIR பணிக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு. பெயர் விடுபட்டிருந்தால், புதிதாக விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம்.
பாஜக உடனான கூட்டணி, தேர்தல் நேர ஒப்பந்தம் மட்டுமே என எடப்பாடி பழனிசாமி பேச்சு. மதச்சார்பின்மை கொள்கையே அதிமுகவின் உயிர்மூச்சு எனவும் திட்டவட்டம்.
வெளிநாட்டினரின் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய அதிபர் ட்ரம்ப் தீவிரம். உள்துறைக்கு ட்ரம்ப் வழங்கியுள்ள உத்தரவால் பரபரப்பு.
இந்தியாவில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண, காலரின் பெயர்களை ພໍພໍ Caller Name Presentation (CNAP) புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
இச்சேவை சோதனை முறையில் ஒரு சில மாநிலங்களில் அமல்படுத்த திட்டம். மோசடி அழைப்புகளைத் தவிர்க்க, பாதுகாப்பான தொலைதொடர்பு நெட்வர்க்கை உறுதி செய்ய இந்த நடவடிக்கை. CNAP சேவையை ஏர்டெல், BSNL போன்ற மற்ற நிறுவனங்களும் வழங்குமாறு TRAI அமைப்பு வலியுறுத்தல்.
இரு நாட்டு உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு ஓமனின் உயரிய விருது - 29வது நாடாக ஓமன் அரசு பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆஃப் ஓமன் விருது வழங்கி கவுரவித்தது
தமிழ்நாட்டின் தீய சக்தி தி.மு.க, தூய சக்தி த.வெ.க என ஈரோட்டில் விஜய் ஆவேச பேச்சு - 2026 தேர்தலில் தீய சக்தி தி.மு.கவுக்கும், தூய சக்தி த.வெ.கவிற்கும் தான் போட்டி என்றும் பேச்சு
அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்கள் மற்றும் கூட்டங்ளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
Tags: தமிழக செய்திகள்
