திருப்பரங்குன்றம் தீப வழக்கு - தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி முழு விவரம்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு - தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கினை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.இது சட்டவிரோதமானது” என வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோவில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாதம் முடிந்த நிலையில் தமிழக அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
Tags: தமிழக செய்திகள்
