Breaking News

மூத்த பத்திரிகையாளரும் பிரபல யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

அட்மின் மீடியா
0

மூத்த பத்திரிகையாளரும் பிரபல யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் 

பத்திரிக்கையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.Imageஇதையடுத்து தவெக தேசிய பத்திரிகை செய்தி தொடர்பாளராக ஜெரால்ட் பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டார். 

தவெகவில் இணைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெரால்ட் பெலிக்ஸ், “51 வயதான இந்த முதிர்ந்த வயதில், கடந்த 12 ஆண்டுகளாக நான் கட்டமைத்த தொழிலில் இருந்து ஒரு படி பின்வாங்கி, ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்கப் போகும் ஒரு இயக்கத்தில் இணைய முடிவு செய்துள்ளேன். 

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொண்ட என் முன்னாள் வகுப்புத் தோழரும், என் சக தோழருமான திரு. விஜயைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. திரு. விஜய், இதை நாம் சாதித்துக் காட்டுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்ட் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் குறித்து யூடியூபில் வதந்திகள் பரப்பியதாக செப்டம்பர் 2025ல் கைது செய்யப்பட்டார். காவலில் இருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் கிடைத்தது குறிப்பிடதக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback