தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் - மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் - மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக எங்கு, எப்போது தீபம் ஏற்றப்பட வேண்டுமோ, இந்த ஆண்டும் சரியாக, முறையாக அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
சமூகத்தை துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல.. கேடு கெட்ட மலிவான அரசியல். வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் .
ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது. நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால் அவர்கள் வேறு அரசியலைப் பேசுகின்றனர். நான் உறுதியாகச் சொல்கிறேன்.அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவற்றை முறியடிப்போம். சிதைப்போம்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது. சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனைதான் இருக்கிறது. திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பிரிவினையை தூண்டி சமூகத்தை துண்டாடும் செயல்கள் உண்மையான ஆன்மிகம் அல்ல. வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்.
எப்படி பந்து வீசினாலும் சிக்ச்ர் அடிப்போம். பொட்டியில் சாம்பியன் நாங்கள்தான். மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது. பாஜகவுக்கு தோதான அடிமைகள் சிக்கலாம், புதிய அடிமைகள், பழைய அடிமைகள் பி டீம் , சி டீம் உருவாகலாம். இறுதியில் சாம்பியன் ஆகப்போவது நாங்கள்தான்” என்றார்.
ஸ்டாலின் வெளியிட்ட 6 அறிவிப்புகள்
மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 8.4 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படும்.
மீனாட்சி அம்மன் கோயில் நான்கு மாசி வீதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
உத்தங்குடி உபரி நீர் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாடிப்பட்டி வட்டத்தில் 1.50 கோடி ரூபாய் செலவில் பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்படும்.
மேலூர் அருகில் பாலாற்றின் குறுக்கே 9 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
மேலூர் வட்டத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கேசம்பட்டி நீர்த்தேக்கம், அதனை சுற்றியுள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும்.
Tags: தமிழக செய்திகள்
