Breaking News

ஆங்கிலேயேர் கால நில அளவை கல்லை தான் தீபத்தூண் என்கின்றனர் - கனிமொழி

அட்மின் மீடியா
0

ஆங்கிலேயேர் கால நில அளவை கல்லை தான் தீபத்தூண் என்கின்றனர் - கனிமொழி


திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர்கள் வைத்த நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர். மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதம்,பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பாஜக. பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையை மாற்ற வேண்டும் என கேட்பது சரியானது கிடையாது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஆட்சியில் இல்லடா அளவிற்கு திமுக ஆட்சியில் தான் அதிக கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளது திராவிட கட்சிகளின் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. 

திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது.தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்.திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் எங்காவது அமைதி நிலவுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback