Breaking News

அமித்ஷா சந்திப்பு ஏன்? தனிக்கட்சி தொடங்க திட்டமா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஓபிஎஸ் சொன்ன பதில்

அட்மின் மீடியா
0

அமித்ஷா சந்திப்பு ஏன்? தனிக்கட்சி தொடங்க திட்டமா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?  ஓபிஎஸ் சொன்ன பதில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். 

அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதுவே தமிழக மக்களின் கருத்தாகவும் இருக்கிறது என்பதை அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறேன்.

பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித் ஷாவைச் சந்தித்தேன். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக் கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை" என்று தெரிவித்தார்

மேலும், “செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு என்னிடம் பேசவில்லை. நானும் அவரிடம் பேசவில்லை” என பதிலளித்தார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback