Breaking News

தவெக தலைவர் விஜய்யுடன் ராகுல் காந்தி வியூக வகுப்பாளர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு!

அட்மின் மீடியா
0

தவெக தலைவர் விஜய்யுடன் ராகுல் காந்தி வியூக வகுப்பாளர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் சந்திப்பு!

2026 ஏப்ரலில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ முதல் முறையாக களம் காண உள்ளது

இந்நிலையில் 2026 தேர்தலை முன்வைத்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் மேலிடமிருந்து ஐவர் குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து “காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது” என்று கூறியிருந்தார்கள்

இந்த சூழ்நிலையில், ராகுல்காந்தியின் நெருக்கமான தேர்தல் வியூக நிபுணரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் நடைபெற்றது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback