காதலித்து திருமணம் ஆன 2 மாதத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமண ஜோடி உயிரிழப்பு நடந்தது என்ன
காதலித்து திருமணம் ஆன 2 மாதத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமண ஜோடி உயிரிழப்பு நடந்தது என்ன
ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம் மற்றும் 19 வயதான பவானி ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக செல்ல செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.
அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் கதவின் அருகே நின்று வாக்குவாதம் செய்த தம்பதி சிறிது நேரத்திலேயே கீழே விழுந்தனார் வங்கபள்ளி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், ரயிலில் இருந்து கீழே விழுந்த கணவன்-மனைவி இருவருக்கும் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் இருவரும் மீட்கப்படுவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுவதற்கு முன் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
