கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து 23 பேர் பலி வீடியோ இணைப்பு
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து 23 பேர் பலி வீடியோ இணைப்பு
கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அர்போரா பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதியில் (நைட் கிளப்) சனிக்கிழமை நள்ளிரவு 12.04 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தில் இதுவரை 3 பெண்கள் உள்பட 23 பேர் பலியாகி இருப்பதாக கோவா காவல்துறை தலைவர் அலோக் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு நள்ளிரவில் விரைந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,”முதல்கட்டத் தகவலின்படி விடுதியின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் 3 அல்லது 4 பேர் மட்டுமே சுற்றுலாப் பயணிகள். மற்ற அனைவரும் சமையலறையில் பணியிலிருந்த விடுதி ஊழியர்கள்.பாதுகாப்பு குறைபாட்டுடன் இயங்கிய விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். சுற்றுலாப் பருவத்தின் உச்சகட்ட காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது துரதிஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.
கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோவாவின் அர்புராவில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். தீ விபத்தில் உறவுகளை இழந்தவர்களுடன் நான் துணை நிற்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். நிலைமை குறித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உடன் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1997530024556335136
Tags: இந்திய செய்திகள்