வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!
அட்மின் மீடியா
0
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கணக்கீட்டு காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்படும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த காலத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம். எந்த தகுதியான குடிமகனும் விடுபடாமல், தகுதியற்றவர்கள் சேர்க்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
