பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்ன என்ன முழு விவரம் aiadmk general body meeting 2025
பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன என்ன முழு விவரம் aiadmk general body meeting 2025
பொதுக்குழு:-
சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக அண்ணன் கே.பி.முனுசாமி அவர்கள் நியமனம்
அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவர் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.இந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்த இபிஎஸ், அவர் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தீர்மானம் - 8
தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளசிசுக்கள் தாப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டன
தீர்மானம் - 9
படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்!
தீர்மானம் -10
சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள், கொள்ளைகள். பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும். பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்!
தீர்மானம் -11
2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, ‘நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கு எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையு ஏமாற்றி வருகின்ற திமுக போலி மாடல் அரசுக்கும், முதலமைச் திரு. ஸ்டாலினுக்கும் கண்டனம்!
தீர்மானம் -12
வல்லவர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் திமுக வினர்' என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள். அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேபர் ராஜினாமா என்கிற அளவுக்கு ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
தீர்மானம் -13
சமூக நீதியை காவு கேட்கும் திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் நாடே வெட்கித் தலைகுனிகிறது! ஜாதிகள் அற்ற சமத்துவத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது கொள்கைகளாகும்! இவற்றிற்கு மாற்றாக, பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்!
தீர்மானம் -14
மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிய, தென்னக நதிகளின் இணைப்பு மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பையும்; ஆனைமலையாறு-பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தைத் தொடர்வதற்கு அக்கறை இல்லாமலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்தத் தவறியும், மேகதாது அணை கட்டுவதாகச் சொல்லும் நடவடிக்கைகளை தடுக்கத் தவறியும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தவறியும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தவறியும், உப்பிலிப்பாளையம் கோல்டுவின்ஸ் முதல் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி ஃபெயிலியர் மாடல் திமுக அரசு, தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் விடியா திமுக அர ை | இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது !
தீர்மானம் -15
நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்; அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது!நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

