இன்றைய முக்கிய செய்திகள் 07.12.2025
இன்றைய முக்கிய செய்திகள் 07.12.2025
ஈரோட்டில் டிச.16ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தார்
கோவை வால்பாறையில் அசாமைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தை, சிறுத்தை தாக்கி பலி.
சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் . வணிகப் பயன்பாட்டுக்கு முன்பதிவு மூலம் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் 6,000 லி குடிநீர் ரூ.735ல் இருந்து ரூ.1,025 ஆகவும், 9,000 லி குடிநீர் ரூ.1,050ல் இருந்து ரூ.1,535ஆகவும் உயர்வு. உற்பத்தி, லாரி வாடகை உயர்வால் கட்டண உயர்வு என தெரிவிப்பு
குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். எஸ்ஐஆர், வாக்குச்சாவடி பணிகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்.
அன்புமணியை பாமக தலைவராக அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை. டெல்லி உயர் நீதிமன்றம்| தீர்ப்பு.அன்புமணியின் பதவிக்காலத்தை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் விளக்கம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அன்புமணி பாமக தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது; தம்மிடம் இருந்து கட்சியை பறிக்கும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிக்கை
கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து. விடுதி ஊழியர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு.
உக்ரைன் மீது வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய ரஷ்யா. குழந்தைகள், செல்லப்பிராணிகளுடன் மெட்ரோ ரயில் நிலையங்களில் உக்ரைன் மக்கள் தஞ்சம்.
6வது நாளாக இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு விமான பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு தானியங்கி முறையில் பணத்தை திருப்பி அளிக்க இண்டிகோ நடவடிக்கை - அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமென அறிவிப்பு
சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் தீ விபத்து, 3 வண்டிகளில் வந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயை அணைத்து வருகின்றனர்
S.I.R படிவங்களில் தவறான தகவல்களை கொடுத்த தற்காக உத்தரபிரதேசத்தில் குடும்பத்தினர் மீது வழக்கு - நாட்டிலேயே முதல்முறையாக நடவடிக்கை எடுத்தது தேர்தல் ஆணையம்
மதுரையில் ரூ.150.28 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீரநங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் விலையில்லா லேப்டாப் திட்டத்தை வரும் 19ம் தேதி துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி 40 வது ஓவரிலேயே ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வாகை சூடியது.
உரிமை கோராமல் வங்கிகளில் உள்ள பணத்தில் 190 கோடி ரூபாய் முதற்கட்டமாக திருப்பி அளிக்க ஏற்பாடு - பணத்தை ஒப்படைக்க நாடு தழுவிய நடவடிக்கையை மேற்கொள்கிறது மத்திய அரசு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் தற்காலிகமாக ரத்து என அறிவிப்பு -பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு நடவடிக்கை என தேவஸ்தான நிர்வாகம் தகவல்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்பது புதிய வளர்ச்சியின் குறியீடு; உலக பொருளாதாரம் சறுக்கலில் இருந்தாலும், இந்தியாவின் பாதை வளர்ச்சியில் பயணிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்
மதத்தை வைத்து அரசியல் செய்ய பாஜக நினைப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு; திமுக இருக்கும்வரை பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என உறுதி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு எதிராக பேச முடியுமா? அதிமுக குறித்து சீமான் விமர்சனம்
மதுரையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அரசு தகவல்
புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி நடக்கும் விஜய் பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேர் மட்டுமே அனுமதி; கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதியில்லை என காவல் துறை நிபந்தனை
Tags: தமிழக செய்திகள்
