இன்றைய தலைப்புச் செய்திகள் 06.12.2025 - Today headline news
அட்மின் மீடியா
0
இன்றைய தலைப்புச் செய்திகள் 06.12.2025 - Today headline news
டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரயில் டிக்கெட் முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விருப்பத் தேர்வாக 'லோயர் பெர்த்'-ஐ தேர்வு செய்யாவிட்டாலும், அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை” -ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
செங்கோட்டையனை தொடர்ந்து விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திருநெல்வேலியில் இருட்டுக்கடை பெயரில் செயல்பட்டு வந்த போலியான 5 அல்வா கடைகளுக்கு சீல் வைப்பு டால்டாவில் தயார் செய்த தரமில்லாத 1000 கிலோ அல்வாவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அல்வா கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு; அரசின் வழக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி பதில்
திருப்பரங்குன்றம் மலையின் மீது இருப்பது நில அளவைக் கல் தான் என ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உறுதி. தீபத் தூணாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டம்.
49ஆவது சென்னை புத்தகக் காட்சி 2026 ஜனவரி 7 முதல் 19 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவிருக்கிறது
தஞ்சாவூரில் இந்து மற்றும் இஸ்லாமியப் பெண்கள் இணைந்து ஏற்றிய கார்த்திகை தீபங்கள். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முழக்கம்.
விமானிகள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 1000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் அவதி கவுண்ட்டர்கள் முன்பு ஊழியர்களுடன் வாக்குவாதம்
இண்டிகோ விமானங்கள் ரத்து எதிரொலியாக கடைசி நிமிட கட்டணமாக பெங்களூரு-டெல்லி ரூ.70,000 வசூல்; டெல்லி-சென்னை 82,000ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு - 37 ரயில்களில் 116 பெட்டிகள் கூடுதலாக சேர்த்துள்ளதாக ரயில்வே தகவல்
இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை 2030 வரை தொடர ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்; சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்பு
சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு; மழை காரணமாக கடந்த 2ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாள் ஆகும்
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைப்பதே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளில் எடப்பாடி பழனிசாமி உறுதி
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி; தனிக்கட்சி தொடங்குவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விளக்கம்
சென்னையில் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு; தமிழ்நாடு அரசியல் நிலவரம் தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல்
Tags: தமிழக செய்திகள்
