Breaking News

04.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines

அட்மின் மீடியா
0
04.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines




திருப்பரங்குன்றம் மலையில் 100 ஆண்டு மரபுப்படி கார்த்திகை தீபம் ஏற்றம்.தடுப்புகளை உடைத்து எறிந்து இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு அமல்.

ஏவிஎம் சரவணன் காலமானார் ஏ. வி. எம் சரவணன் என்றழைக்கப்படும் எம். சரவணன் அல்லது மெய்யப்பன் சரவணன் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார். இவரது தந்தையான ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது டிட்வா புயல்.வட சென்னை பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை. கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் மனுத் தாக்கல்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதிய குடியிருப்பு,மனைகளை வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வசதி.தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்.

வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை உடனே சமர்பிக்க வேண்டும் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பா.ம.க. இன்று போராட்டம்.அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு.

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் திடீர் சந்திப்பு. தமிழ்நாட்டில் உடனடியாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாமக சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் ராசரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.இதில் கலந்து கொள்ள அதிமுகவிற்க்கு அழைப்பு

செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். காலக்கெடு 14.12.2025 வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்.ஜோதி வடிவிலான அண்ணாமலையாரை தரிசித்து லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்*

மணப்பாறை அருகே நடைபெற்ற அசைவ விருந்து.சாதி,மத, பேதமின்றி நடைபெற்ற விருந்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு.*

2026-ம் ஆண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.பாடத் திட்டத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

தாளவாடி அருகே கிராமங்களுக்குள் யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சம்.இரவில் இடம் பெயரும் காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைவதாக புகார்.* 

குஜராத்தில் பைக்கில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு.தலைக்கவசம் அணியாமல் அசுர வேகத்தில் சென்றதால் தலை துண்டானது.

ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.உக்ரைன் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்.

2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.டெல்லியில் 5 அடுக்கு உச்சபட்ச பாதுகாப்பு.

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.விராட் கோலி, ருத்துராஜ் சதம் அடித்தும் வீணானது.*

*🛑🟡📰 தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு. சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், பும்ரா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback