Breaking News

SIR குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன? தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ முழு விவரம்

அட்மின் மீடியா
0

SIR குறித்துதவெக தலைவர் விஜய் வெளியிட்ட  வீடியோ  முழு விவரம்


தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 

எல்லாருக்கும் வணக்கம். இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமைல ரொம்ப ரொம்ப முக்கியமானது. வோட்டிங் ரைட் வாக்குரிமை. ஒரு மனுஷன் உயிரோட இருக்கான்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். அதனாலதான். Voting is not only right but also our life. ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி இப்ப நான் உங்ககிட்ட ஷேர் பண்ணப் போறேன். இது நான் கேள்விப்பட்ட உடனே எனக்கு ரொம்ப ஷாக்கிங் தான் இருந்தது. 

இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்குற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லனு சொன்னா நம்புவீங்களா? நான், நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. நான் பயமுறுத்தற நினைக்காதீங்க. அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தா நம்மள மாதிரியே இன்னும் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடுற உரிமையே இல்லாத மாதிரி ஒரு நெலம வந்தாலும் வரலாம். இதுக்கு main reason அந்த S.I.R சிறப்பு தீவிர திருத்தம். இப்போ இந்த S.I.R நம்ம தமிழ்நாட்டுல எப்படி work ஆக போகுது? 

கடந்த January மாசம் எடுத்த அந்த கணக்கெடுப்புல ஆறு கோடியே முப்பத்தி ஆறு லட்சம் வாக்காளர்கள் நம்ம தமிழ்நாட்டுல இருக்காங்க. ஆனா அவங்க யாருக்குமே இந்த ஓட்டு போடுற உரிமையே இல்ல. அந்த BLO சொல்லுவாங்க. பூத் லெவல் ஆபீசர்ஸ், வாக்குச்சாவடி நிலை அலுவலர். அவங்க தான் வீடு வீடா போயி அந்த form ஐ கொடுப்பாங்க. அதை நாம fill up பண்ணி கொடுக்கணும்

அத தேர்தல் ஆணையம் அத எடுத்துட்டு போய் அதை scrutinize யூஸ் பண்ணி, அது எல்லாமே கரெக்டா இருக்கான்னு செக் பண்ணி பாத்ததுக்கு அப்புறம் அந்த வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க. அந்த வாக்காளர் பட்டியலில் நம்ம பேரு இருக்கனும். அப்ப தான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல் வர்ற வரைக்கும் நம்ம வாக்காளர்களைன்றது அது உறுதியே செய்ய முடியாது. In case அந்த புது பட்டியல்ல நம்ம பேரு இல்லனா அது ஒரு தனி process. அது ஒரு தனி form. அது ஒரு தனி கிளை என்ற மாதிரி. அது ஒரு வேற வேலை. So இந்த மாதிரி நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருக்குறதுனால மக்களுக்கு இது மேல ஒரு confusion ஒன்னு இருக்கு.இது verification ஆ இல்ல ஒரு மறைமுக registration ஆ இல்லை இது ஒரு new registration மாதிரியே தானா அப்படின்ற மாதிரி நிறைய confusion இருக்கு. அவங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். இந்த மாதிரி வீடு வீடா போயி அந்த enumeration form நாம fill up பண்ணி கொடுக்கும் போது அதுக்கான acknowledgement ஐ அந்த BLO அந்த ஆபீசர் கிட்ட இருந்து நீங்க வாங்கிக்கணும். 

அது ரொம்ப ரொம்ப முக்கியம். இது நான் சொல்லுறது வாக்கா. வாக்காளர் பட்டியல்ல already உங்க பேர் இருக்கிறவங்களுக்கு நான் சொல்றேன். இப்போ புது வாக்காளர்கள். ஃபர்ஸ்ட் டைம் voters. அவங்களுக்கு Form six இன் ஒன்னு இருக்கு. அதை நீங்க fill up பண்ணி, நீங்க உங்க ஏரியாவுல இருக்கிற சம்பந்தப்பட்ட அந்த உங்க அலுவலகத்துல நீங்க direct ஆகவும் சப்மிட் பண்ணலாம்.இல்ல நீங்க ஆன்லைன்லயும் சப்மிட் பண்ணலாம். அப்படி ஆன்லைன்ல நீங்க சப்மிட் பண்ணினா அதுக்கான screenshot எடுத்து வெச்சுக்கோங்க. போன்ல மெசேஜ் வரும். அதை save பண்ணி வச்சுக்கோங்க. Abroad ல இருக்குறவங்க கூட அந்த form ஐ டவுன்லோட் பண்ணி நீங்க அதை fill up பண்ணி சப்மிட் பண்ணலாம். அதுக்கான acknowledgement ஐ வாங்கி வச்சுக்கோங்க. ரொம்ப முக்கியமா உங்களோட BLO அந்த ஆபீசர் யாருன்னு தெரிஞ்சி வச்சிக்கங்க. இந்த தேர்தல் ஆணையம் அந்த வெப்சைட்ல போனீங்கன்னா அந்த BLO ஆபீசரோட போன் நம்பர் கூட நீங்க எடுத்து வைச்சுக்கலாம். I

n case உங்கள யாரும் reach பண்ணல இல்ல உங்களுக்கு அந்த form கிடைக்கல. அப்படின்னா நீங்க அவரை கான்டாக்ட் பண்ணி அந்த form வாங்கி நீங்க fill up பண்ணி நீங்க சப்மிட் பண்ணலாம். ரொம்ப முக்கியமா அதுக்கான acknowledgement ஐ வாங்கி வச்சுக்கோங்க. இது எல்லாமே சரியா செஞ்சாலும் இந்த S.I.R மேல சில டவுட்ஸ் இருக்கு. அது என்னன்னா, இந்த ஆறு கோடியே முப்பத்தி ஆறு லட்சம் வாக்காளர்களுக்கு ஒருத்தர் விடாம இந்த ஒரே மாசத்துக்குள்ள எப்படி எல்லாருக்குமே அந்த form போய் ரீச் ஆகும். ஒன்னு ரெண்டாவது நீங்க வரும்போது வீட்டை பூட்டிட்டு வேலைக்கு போய்ட்டா என்ன பண்றது? இப்ப நீங்க வருவீங்கன்றதுக்காக வேலையெல்லாம் விட்டுட்டு வீட்டுக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கனுமா? இதுல main ஆ பாதிக்கப்படப்போவது உழைக்கிற மக்கள். ஏழைகள். வேலைக்கு போற பெண்கள்.இவங்களுக்கு யாரு கரெக்ட்டா பதில் சொல்லப்போறது? ஒரு நியாயமான S.IR என்ன நடக்கும்? 

இப்போ இறந்து போனவங்கள மார்க் பண்ணி அதுல இருந்து டெலீட் பண்ணனும்இப்போ போலி வாக்காளர்கள் இருந்தாங்கன்னா அவங்கள மார்க் பண்ணி டெலீட் பண்ணனும். இப்போ already ஓட்டு இருக்குறவங்களுக்கு எதுக்கு இந்த registration என்ற பேர்ல இவ்வளவு குழப்பங்கள் அப்படிங்கறது தான் இங்க கேள்வி. இப்போ இப்ப புதுசா வர்ற வாக்காளர்களையோ இல்ல ஓட்டு இல்லாதவர்களையோ சேர்த்தா பத்தாதா? இப்ப ரீசண்டா நடந்த election 2024ல எப்படி எல்லாருமே ஓட்டு போட்டோம். அதுல ஓட்டு போட்டவங்க கூட இப்ப புதுசா ரெஜிஸ்டர் பண்ணணும்னா அது ஏன் இந்த confusion அப்படின்னு தான் நாங்க கேட்கிறோம். அதனால தான் நாங்க எதிர்க்கிறோம். 

இப்ப புதுசா சில. Complaints எல்லாம் வர ஆரம்பிக்குது. அது என்ன என்னனா முக்கியமா நம்மளுடைய தவெக தோழர்களுக்கு அந்த form கிடைக்க மாட்டேங்குது. கொடுக்க மாட்டேங்குறாங்க அப்படின்ற சில complaints. இது யாரு பண்றாங்க அப்படிங்கறது நான் தான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு. இப்ப இருக்குற ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கைப்பாவையாக இருக்கக்கூடிய சில பேரு வந்து இத செய்ய start பண்ணியிருக்காங்க. அதனால மை டியர் Virtual warriors. இத வந்து சாதாரணமா எடுத்துக்காதீங்க. இது எல்லாருக்குமே அந்த form போய் ரீச் ஆகணும். இதுல ரொம்ப உறுதியா இருங்க. அதையும் மீறி உங்களுக்கு அந்த form கிடைக்கலைன்னா இருக்கவே இருக்கு ஆன்லைன் தேர்தல் ஆணையம். அந்த வெப்சைட்ல போயி அந்த form-ஐ டவுன்லோட் பண்ணி நீங்க fill up பண்ணி சப்மிட் பண்ணலாம்.

 உங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு நீங்க செஞ்சு கொடுங்க. பக்கத்து வீட்டுல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. தெரிஞ்சவங்களுக்கு, தெரியாதவங்களுக்கு, பழகுனவங்களுக்கு, பழகாதவங்களுக்கு, எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சி செஞ்சி கொடுங்க.நம்ம புது வாக்காளர்கள். நம்ம நண்பா நண்பிகள். அவங்க ரொம்ப கேர்புல்லா இருக்கனும். நான் already சொன்ன மாதிரி உங்களுக்கான form அந்த form நம்பர் six. அத கரெக்ட் ஆன details ஓட கரெக்ட் ஆன உங்க documents வச்சு அதை சப்மிட் பண்ணுங்க. ஏன்னா வரப்போற தேர்தல்ல நீங்கதான் மிக முக்கியமான ஒரு சோர்ஸ் அப்படிங்கறது எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம். அதனால உங்களை disturb பண்றதுக்கு உங்க பேரு அதுல include பண்ணாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ, என்னென்ன தில்லுமுல்லு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க. 

இது நமக்கு எல்லா திசைகளையும், எல்லா பிரச்சனைகளுக்கும் கொடுத்துட்டு தானே இருக்காங்க.அது default ஆ நடந்துட்டு தான் இருக்கும். அது ஒன்னும் பண்ண முடியாது. அந்த மாதிரி ஓட்டு போடற விஷயத்துலயும் அவங்க என்ன உத்தமரா மாறவா போறாங்க? சில மீட்டிங்ல எல்லாம் repeated ஆ ஒரு விஷயம் தான் சொல்றேன்ல. ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி அப்படின்னுட்டு அது மேடைக்கு மேடை. அவங்க அதை prove பண்ணிட்டு இருக்காங்க. அதனால தோழர்களே. வரப்போற தேர்தல்ல நாம யாருன்னு காட்டணும். நம்ம பலம் என்னனு காட்டணும். அதுக்காக அந்த பலமான அந்த powerful ஆன ஆயுதத்தை நம்ம கைல எடுக்கணும். அந்த ஆயுதம் வேற எதுவுமே இல்ல. ஓட்டு வாக்கு ஜனநாயகம். 

அது இருந்தாதான் நாம அந்த வெற்றியை நோக்கிய நம்மளால பயணிக்க முடியும். தமிழ்நாடு அந்த வாக்கு சாவடி முன்னாடி திரண்டு நிக்கணும். அதை பாத்துட்டு தமிழ்நாடே தமிழக வெற்றி கழகமா?இல்ல தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா அப்படின்ற மாதிரி இருக்கணும். வீடுன்னு ஒன்னு இருந்தா தான் ஓடு மாத்த முடியும்னு அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்காங்க. அந்த மாதிரி ஓட்டுன்னு ஒன்னு இருந்தா தான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அந்த enumeration form. நீங்க ஆன்லைன் ல நீங்க fill up பண்ணும் போது அதுல ஒரு சில problems வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. 

அது உங்களுடைய voter ID ல் இருக்குற உங்க பெயரும், ஆதார் கார்டுல இருக்குற பெயரும், அந்த ஸ்பெல்லிங், இனிஷியல் எல்லாமே ஒரே மாதிரி இருந்தாதான் அது அக்சப்ட் ஆகும். இல்லனா அக்சப்ட் ஆகாது. அதுக்கு கொஞ்சம் கேர்புல்லா பண்ணுங்க. அது கொஞ்சம் user friendly ஆ இருக்கலாம். கேட்டதுக்கு அதெல்லாம் முடியாது. அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல. அதுக்கெல்லாம் ஆளுங்க இல்ல பண்ண முடியாதுன்னு reply பண்ணிட்டாங்க. அதனால மை டியர் தவெக தோழர்களே. மை டியர் ஜென்ஸி. படைபலமே உஷாரா இருங்க. Confident இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை. நன்றி வணக்கம்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/TVKVijayHQ/status/1989645823588860392

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback