Breaking News

புதிய ஆதார் ஆப் அறிமுகம் ,சிறப்பம்சங்கள் என்ன என்ன முழு விவரம் new aadhaar app specifications

அட்மின் மீடியா
0

புதிய ஆதார் ஆப் அறிமுகம் ,சிறப்பம்சங்கள் என்ன என்ன முழு விவரம் new aadhaar app specifications



இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆப் சிறப்பம்சங்கள் என்ன 

இந்த செயலியின் மூலம் உங்கள் ஆதார் கார்டை டிஜிட்டலாக உங்கள் போனில் சேமித்து வைக்கலாம்

இந்த ஆப்பில் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் லாக் மூலம் உள்நுழையும் வசதி இருப்பதால், பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே தங்கள் சுயவிவரங்களை இதில் அணுக முடியும்.

மேலும், QR குறியீடு அல்லது மறைக்கப்பட்ட ஐடி (Masked ID) (அதாவது ஆதாரில் உள்ள12 இலக்க எண்ணையும் மறைத்துவிடும்.) ஆதார் தகவல்களை நீங்கள் பகிரலாம். 

ஒரு மொபைல் போனில் ஐந்து ஆதார் சுயவிவரங்கள் வரை சேர்க்கும் வசதி

இனி எந்தவொரு அரசு அல்லது தனியார் சேவைக்கும் QR குறியீடுகள் மூலம் சரிபார்ப்பு செய்யலாம். 

புதிய ஆதார் ஆப் பயன்படுத்துவது எப்படி:-

கூகிள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் செயலியில் உள்நுழைந்து, OTP நம்பரைப் பதிவிட்டு சரிபார்க்க வேண்டும்.

முக அங்கீகாரம் அல்லது பயோமெட்ரிக் லாக் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

உங்கள் ஆதார் சுயவிவரத்தைச் சேர்க்க வேண்டும்.

ஐந்துக்கும் மேற்பட்ட சுயவிவரங்களைச் சேர்க்க விரும்பினால் அந்த அனைத்து சுயவிவரங்களும் அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது நீங்கள் QR குறியீட்டைப் பகிரலாம். ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்யலாம். மேலும் செயலியிலிருந்து டிஜிட்டல் சரிபார்ப்புகளையும் செய்யலாம்.

ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்;-

https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=ta

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback